பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ξό 2- Ο தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

இனி மலையரனும் நிலவரணுஞ் சென்று சூழ்ந்து நேர்த வில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல வடிச் சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்களும் அமைந்தனவும் அன்றிக் காட்டரனும் நீரரனும் அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம். இங்ங்னம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலும் கலியூழி தோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இவை வஞ்சமுடைத்தாயிற்று.

சிறப்புடை அரசியலாவன, மடிந்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடிபிறக்கிட்டோ னையும் பெண்பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்த படையெடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையுங் கொல்லாது விடுதலுங் கூறிப் பொருதலும் முதலியனவாம்.

இனி ஆகுமென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்

றுணர்க. (à O) 1. தோட்டிமுள் - அங்குசம் போன்று பகைவரை வலித்

திழுக்கும் முள்.

இடங்கர் - முதலையினத்துள் ஒருவகை.

பதனம் - மதிலுறுப்பு

ஏப்புழை - மதிலின் உட்புறத்தே இருந்து அம்பு

எய்யுந்துளை. ஞாயில் - மதிற்புறத்தின் உள்ளிருந்து புறத்தார் மேல்

அம்பு எய்து மறையும் சூட்டு. இது குருவித் தலை எனவும் வழங்கும்.

எழு - புறத்தோர் சேனை உட்புகாதவாறு

தடுத்து நிறுத்தும் கணைய மரம்.

எழுவுஞ்சீப்பு - சதவுக்கு வலியாக உள் வாயிற்படியிலே

(சீப்பு-விசை) எடுக்கவிடும் மரங்கள் கதவொடு பொருந் தின மேலிற்றாழுமாம்; நிறைத்த கதவு மாம்., திறக்குங்காலத்து மேலே எழுப்புகை

யால் எழுவுஞ்சிப்புஎன்றார்.