பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-அ. இ. .ெ இ,

வஞ்சனை பலவும் வாய்த்த அரிய மதிலை அமைத்துக் கொண்டு நாடாள் வேந்தன் அதனை அடைத்துக்கொண்டு உள்ளி ருத்தலும், பகைவேந்தன் உள்ளே ஒடுங்கியிருக்கும் வேந்தனைச் குழ்ந்தழித்தலும் அவர்தம் பேராண்மையாகிய தறுகண் உணர் வுக்கு மாசுதரும் செயல்களாதலின் அரணைப்பற்றிக்கொண்டு நிகழும் வஞ்சமுடைய இப் போர்ச்செயல்களைக் கலியூழிதொறும் பிறந்த சிறப்பில்லா அரசியல் என்றார் நச்சினார்க்கினியர். சிறப் புடைய அரசியலுக்கு அவர் தரும் விளக்கம் தறுகண் வீரர்பால் இன்றியமையாது அமைய வேண்டிய பேராண்மையின் வெற்றி யினை இனிது புலப்படுத்தல் காணலாம்.

கருத்து :- இது, பற்றலர் அரணை முற்றி எறியும் உழிஞைப் புறத்திணை, மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம் எனக் கூறுகிறது.

பொருள் :- உழிஞை தானே-உழிஞைத் திணையானது; மருதத்துப் புறனே-மருதம் என்ற அகத்திணைக்குப் புறனாகும்.

குறிப்பு :- தானே என்பதன் ஏகாரம் பிரிநிலை. புறனே என்பதன் ஏகாரம் ஈற்றசை,

மருதத்துக்கும் உழிஞைக்கும் அரனுடைய ஊர்களே நிலைக் களம் ஆதலானும், புலத்தலும் ஊடலும் மருத ஒழுக்கம் ஆதல் போல முற்றிய ஊரரணின் அகப்புறப் படைகள் தம்முள் கலாய்த்து இகலுதலே உழிஞையாதலானும், மருதத்துக்கு உழிஞை புறனாயிற்று.

அ. (அ)

கருத்து :- இஃது உழிஞையின் இயல் விளக்குகிறது.

பொருள் :- முழுமுதல் அரணம் முற்றலும்-கெடாத தலையான காவலுடைய கோட்டையை வளைதலும்; கோடலும்-எயில்காவல ரெதிர்ப்பை அழித்து எயிலைக் கைப் பற்றுதலும்; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப-அம்முறைகளின் தன்மையுடைத்தாம் உழிஞைத்திணை என்பர் புறநூற் புலவர்.

குறிப்பு - முன்னைச் சூத்திரத்து உழிஞை என்பது ஈங்கு ஆகும’ என்னும் வினைக்குக் கொண்ட பொருள் தொடர்பால் எழுவா யாயிற்று. என்ப' என்பதற்கு ஏற்பப் புறநூற் புலவர் என்னும் வினைமுதல் அவாய்நிலையால் வருவிக்கப்பட்டது ஒசை நோக்கி அனைய என்பதன் ஈறுகெட்டு அனை என நின்றது.