பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா- அ ද් (2–H.

எல்லாவுறுப்புக்களாலும் நிறைவுடையதாய் முழுமை பெற்ற (பகைமன்னனது) தலைமை வாய்ந்த அரணினைப் புறத்தே வளைத்துக் கொள்ளுதலும் (உள்ளேயிருந்த வேந்தன்) அம்மதிலை நெகிழவிடாது பாதுகாத்துக் கோடலும் ஆகிய அத்தன்மை யவாகிய போர்நெறிமரபினையுடையது உழிஞைத்திணையாகும்.

இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்ட நிலையில் தன்மேற் படையெடுத்து வந்த வேந்தனை எதிர்சென்று தடுத்துநிறுத்தும் ஆற்றலின்றித் தன் மதிலகத்தே தங்கிக் கதவடைத்துக் கொண்டி ருக்கும் வேந்தனது மதில், பெரும்பாலும் மருதநிலப்பகுதியாகிய நகரத்தையொட்டியமைந்திருத்தலானும், அம் மதிலை வளைத் துக் கொண்ட வேந்தனும் அந்நிலத்தில் தங்கியிருத்தலானும், ஒத்த அன்பினனாகிய தலைவன் வாயில் வேண்ட்த் தலைவி அதற்கு உடன்படாது கதவினையடைத்துக்கொண்டு வீட்டினுள்ளேயிருத்த லாகிய மருதத்திணையொழுகலாற்றைப் போன்று, நகர்ப்புறத்தே மதிலை வளைத்துக்கொண்டிருக்கும் வேந்தன் அரணின் உள்ளே விரைந்து நுழைதலை விரும்ப உள்ளிருந்த வேந்தன் அதற்கு உடன் படாது கதவினை அடைத்திருத்தல் ஒப்புமையானும், ஊடிய தலை வியைப் போன்று உள்ளிருந்த வேந்தனும் வெளியே புறப்பட விரும் புதலானும், அவ்வழிப் போர் செய்வார்க்கு மருதத்துக்குக்குரிய விடியற்காலமே ஏற்புடைய காலமாதலானும், மருதத்திணைக்குப் பெரும்பொழுது வரையறையில்லாதவாறுபோன்று இதற்கும் பெரும்பொழுது வரையறையின்மையானும், புலத்தலும் ஊடலும் மருதத்தினையாதல் போல அரணைச் சூழ்ந்து முற்றியும் அதனை நெகிழவிடாது பற்றியும் இவ்வாறு அரணின் புறத்தும் அகத்தும் உள்ள இருதிறப்படையாளரும் தம்முட்பொருதலே உழிஞைத் திணையாதலானும் மருதம் என்னும் அகத்திணைக்கு உழிஞை புறனாயிற்று என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தரும் விளக்கம், அகமாகிய மருதத்திணைக்கும் புறமாகிய உழிஞைத் திணைக்கும் இடையேயமைந்த நெருங்கிய தொடர்பினை நன்கு புலப்படுத்துதல் உணர்ந்து மகிழத்தகுவதாகும்.

மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில் காத்தலும் என்னும் தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞை எனவும் நொச்சி எனவும் இருதிறப்பெயர் பெறும் என்பர் இளம்பூரணர். உழிஞைத் துறை வகைகளுள் அகத்தோன் வீழ்ந்த நொச்சியையும் ஒரு துறை யாகத் தொல்காப்பியர் அடக்கிக் கூறுதலால், நொச்சி என்பது அகத்தோன் செயலைக் குறித்ததென்பது அதனைத் தனித்த