பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ද් ඞී. (ජු தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

தொரு திணையாகக் கொள்ளுதல் தொல்காப்பியர் கருத்தன்று என்பதும் நன்கு விளங்கும். நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங்கொள்க........... இக்கருத்தானே 'நொச்சி வேலித் தித்தன் உறந்தை (அகநா. க உ.உ) என்றார் சான்றோரும் எனவரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இங்கு நினைக்கத்தகுவதாகும்.

9. அதுவே தானும் இருநால் வகைத்தே.

இளம் இஃது உழிஞைத் திணையை வரையறுத்து உணர்த் துதல் நுதலிற்று."

(இன்.) அதுதான் இருதால் வகைத்து உழிஞைத் துறை தான் எட்டு வகைத்து.

அவையாமாறு முன்னர்க் காணப்படும். (ஏகாரமும் உம்மை யும் அசைகள்)

கச் இது முற்கூறிய முற்றலுங் கோடலும் ஒருவன் தொழிலன் றென்பது உம் முற்கூறியபோல ஒருதுறை இருவர்க்கு முசியவாகாது, ஒருவர்க்கு நான்கு நான்காக எட்டாமென்பது உங் கூறுகின்றது.

(இ-ள். அதுவே தானும்-அவ்வுழிஞைத் துறைதானும்: இருநால் வகைத்து-மதில் முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத் தோன்கூறு நான்குமென எட்டு வகைத்தது என்றவாறு.

அது மேற்கூறுப. (க.க)

கருத்து :- இது, உழிஞைத் திணை எட்டு வகைப்படும் என்கின்றது.

பொருள் :- வெளிப்படை

ஏகாரம் ஈற்றசை.

1. இஃது உழிஞைத்தினை இத் துணை வகைப்படும் என்கின்றது. எனக் கருத்துரைத்தலே பொருத்தமுடையதாகும்.

2. எண்வகைத்து’ என முழுத்தொகையினைத் தொகுத் தோதாது இரு நால் வகைத்து’ எனப் பகுத்தோதய அதனால், மதிலை வளைத்துக்கொண்ட புறத்தோன்கூறு நான்கும் அதனை அடைத்துக்கொண்டு உள்ளிருந்து போர் புரியும் அகத்தோன் கூறு நான் கும் என இரு நான்காகப் பகுத்துரைத்தார் நச்சி னார்க்கினியர். இவ்வாறு புறத்தோனுக்கு தான்கும் அகத்தோலுக்கு நான்கும் ஆன இரு நான்காகப் பகுத்துரைத்தலே தொல்காப்பியனார் கருத்தென்பது, சொல்லப்பட்ட பாலிருவகைத்தே என அடுத்துவரும் நூ ற்ப அமைப்பினாலும் உய்த்துணரப்படும்,