பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-க0 5, 2–67

'கழிந்தது பொழிந்தென என்னும் (உலக) புறப்பாட் டினுள்,

'ஒன்னா...ாாரெயி லவர்கட் டாகவு நூமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய்' என்பதும் அது

'ஆனா வீகை யடுபோர்' என்னும் (ச உ) புறப்பாட்டும் அது இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது."

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்-அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத் தலைவன் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது செல் வோரும் எடுத்துரைத்தலும்;

'மலையகழ்க் குவனே கடறுார்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறைபோகலின்'

(பத்துப் பட்டினப்-உ எக, உ.எக.) என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக் கூறலின்."

'அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை......... கடிமரத் தடிய மோசை தன்னுளர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப

வாங்கினி திருத்த வேந்தனோ டிங்குநின்

சிலைத்தார் முரசங் கறங்க

மலைத்தனை யென்பது நானுத்தக வுடைத்தே.'

(புறம்-க.க)

பெயரா தலை விளக்குவது இவ்வுரைத் தொடர். கொள்ளார் என்பதற்குத் தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும் என விளக்கம் தருவர் இளம் பூரணர்.

1. புறநானு ற்றில் ஆன வீகை படுபோ சண்ணல் எனத் தொடங்கும் ச.உ-ம் பா டவில் புலவ.ெ ல்லாம் நின்னோக்கினர்...நீயே மாற்றிரு வேந்தர் மண் ணோக்கினையே’ என மாற்றரசர் நிலத்தை வென்று கைப்பற்றுதற்கு முன்னரே பரிசிலர்க்கு வழங்கினான் என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளமை காணலாம்,

இாமபிரான் இராவணனை வென்று அவனது நாட்டைக் கைக்கொள்ளு தற்கு முன்னமே தன்னை அடைக்கலம் புகுந்த வீடணனுக்கு இலங்கையரசினை உரிமை செய்தளித்தது, கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்’ என்னும் இவ்வுழி ளுைத் துறையாம் என்பது கருத்து.

2. பட்டினப்பாலையில் வரும் மலை அகழ்க் குவனே? என்ற தொடர் மாற்றார் மதிலையும் கடல் துர்க்குவனே என்ற தொடர் அம் மதிற் புறத்து அகழையும் சுட்டி நிற்றலின் இப்பகுதி, உழிஞைத் திணையின் துறையாகிய *உள் ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புக்கு எடுத்துக்காட்டாயிற்று என்பதாம்.