பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா க0 ら3.。

தோலின் பெருக்கமும்-அங்ங்ணம் மதின்மேற் சென்று.ழி மதில கத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் கிடுகுங் கேடகமும் மிடையக் கொண்டுசேறலும்:

அரணத்தோர் தத்தம் பதனத்து நிற்றலிற் றோல் கூறிற் றிலர்.

இந்நான்கும்" முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க.

அகத்தோன் செல்வமும்-அகத்து உழிஞையோன் குறைவில் லாத பெருஞ்செல்வங் கூறுதலும்;

அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப் பொருண் மேம்படு பண்டங்களும் முதலியவாம்.

அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்-மாறுபட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த் தொழிலான் வருத்திய கூறலும்:

உதாரணம் :

'கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னா ளினியே யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றுற்றயற் கிடப்பக் களையாக் கழற்காற் கருங்க ணாடவர் உருகெழு வெகுளியர் செறுத்தன சார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே யுருமிசை கொண்ட மயிர்க்கட் டிருமுர சிரங்க ஆர்கொள் குவமே'

(தகடூர் யாத்திரை) என வரும்.

1. கிடுகு என்பது, பகைவர் எய்யும் அம்புகளைத் தடுக்கத் தோலாற் செய்யப்பெற்றது.

கேடகம் என்பது, மரத்தாற் செய்யப்பட்டுத் தோலாற் பொதிந்தது.

2. இந்நான்கும் என்றது, கொள் ளார்தேஎம் குறித்த கொற்றம் முதலாகத் தோலின் பெருக்கம் ஈறாக முற்கூறிய துறைகள் நான்கினையும்.

—10