பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆங்.0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில்கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது.

திறப்பட ஒரு தான் மண்டிய குறுமையும்-அகத்திருந்தோன் தன்னரணழிவு தோன்றியவழிப் புறத்துப் போர்செய்யுஞ் சிறுமையும்;

உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில் உளப்பட- புறத் தோன் அகத்தோன்மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுத §Ø Ël {{ } L.;

'புண் கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்து பிறர் தீண்டல் தகாது வேந்துறை யானே.”

(தகடுர் யாத்திரை) இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழு வரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று."

இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது. சொல்லப்பட்ட நாலிருவகைத்தே-.ே விரு நால்வகைத் தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத்திணை என்றவாறு.

முற்கூறிய தொகையேயன்றி ஈண்டுந் தொகை கூறினார், அந் நாலிரண்டுமேயன்றி அவைபோல்வனவும் நாவிரண்டு துறை தோன்று மென்றற்கு இவை புறத்துவேந்தன் தன் துணையாகிய அரசனையாயினுந் தன் படைத்தலைவரையாயினும் ஏவி அகத்து வேந்தற்குத் துணையாகிய அரசரது முழுமுதலரண் முற்றலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம்.

உதாரணம் முற்காட்டியவே வேறு வேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் படையியங்கரவ’ (புறத்திணை-அ) முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க.

1. அதத்தோன் ೧ು5ಣT அழிவின்றிக் காத்த ற்கு ஏதுவாய் அமைந்த ஆரெயிலாகிய அர ண், அகத்தோன் செல்வமாகிய காரியத்துள் அடங்காமையின் காரணமாகிய அது வேறு கூறப்பட்டது என்பது கருத்து.