பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& IÈ_ 2- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

4. தோலின் பெருக்கமும்-பகைவர் படைக்கலன் உறாவாறு தடுக்கச் செறித்த கேடகங்களின் பொலிவும்:

5. அகத்தோன் செல்வமும்-(கொளற்கு அரிதாய், உணவு முதலிய கூழும் நன்னீரும் படையும் உலையாது.ாக்கும் அறை போகத் தறுகண் மறவர் காவலும் உடைய) அரண் அகக்காவலன் பரிசு குறித்தலும்;

6. அன்றி, முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்அல்லாமலும், முனைந்து அரண் கொள்ள முற்றிய தலைவன் அகத்தவர் எதிர்ப்பால் வி ருந்தும் பகுதியும்; (அணங்கு-வருத்தம்) இனி, "முற்றியோன் அகத்தவனை வருத்தும் பரிசும்’ எனினு மமையும், முன்னதில் அணங்கு தன்வினை; பின்னதிலதுபுறவினை. (முன்னதற்குப், புறத்தோனை அணங்கிய எனக் கொள்ளுதலு மமையும்).

7. திறப்பட ஒருதான் மண்டிய குறுமையும்-ஊறஞ்சாது உரனுடன் ஒருவனாய் எதிர்த்தேறிப் புரியும் குறும்போரும்: (ஊற்றத்தால் தனித்தேறி மாற்றலரை நெருங்கி மலையும் தறு கண்மை குறுமை அல்லது குற்றுழிஞை எனப்படும்.)

"சுதையத் தொங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து சிதையைத் திண்டிறல் இராவணக் குன்றிடைச் சென்றான் ததையச் செங்காரம் பரப்பிய தன்பெருந் தாதை உதயக் குன்றினிற் றுகுகுன்றிற் பாய்ந்தவன் ஒத்தான்.' எனும் கம்பர் பாட்டில், சுக்கிரீவன் இராவணன் மேல் தனியே பாய்ந்து மலைந்த குறும்போர் வருதல் காண்க.

8. உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்படவெகுண்டு மேல்வரும் உழிஞைப் பொருநரைப் பொருட்படுத்தா உரனுடையார் காவலால் கொளற்கரிதாம் அரணின் பெருமை உள்ளிட்டு;

சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே-முன் சூத்திரத்தில் சுட்டப்பட்ட எட்டு வகைத்தாம் உழிஞைத்திணை.

குறிப்பு :- நாலிருவகைத்தே' என முன் சூத்திரத்தில் தொகுத்த உழிஞையின் வகை எட்டும் இங்குக் கூறப்படுதலின் "சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே எனக் குறிக்கப்பட்டன. ஈற்றேகாரம் அசை, இசைநிறை எனினுமமையும். நாலிரு வகைத்தே என்னும் முடிபுக்கேற்ப உழிஞைத்திணை என்னும் எழுவாய், கொண்ட பொருள் தொடர்பால் கொள்ளப்பட்டது.