பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳岳.安 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னர்ச் செல்லவிடுதல்;

மடையமை ஏணிமிசை மயக்கம்"-tதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசைநின்று புறத்தோரும் அகத் தோரும் போர் செய்தலும்;

கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும்-புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன் படையை வென்று அப் புற மதிலைக் கைக்கொண்டு உண்மதிலை வளைத்த வினை முதிர்ச்சி யும், அகத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், புறத்தோன் படையைத் தள்ளிவென்று அப் புற மதிலைக் கைக்கொண்டு வளைத்த வினை முதிர்ச்சியும்;

அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் - புற மதிலி லன்றி உண்மதிற்கட் புறத்தோனால் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதில்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப் பட்ட இடத்திருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்;"

நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க; அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக் காத்தலுமென இருவர்க்குமாயிற்று. இக்கருத்தானே ‘நொச்சி வேலித் தித்தனு றந்தை' (அகம்-க உ.உ) என்றார் சான்றோரும்.

மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்-இடை மதிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம் மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக்கொண்ட புதுக்

۔ --مح==

1. பகைவரை அழித்தல் கருதித் தனது கொற்றவாளினைப் பகைவர் நாட்டின் திசைநோக்கி நல்லநாள் பார்த்துச் செல்லவிடுதல் வாள் நாட்கோள் ஆகும்.

நாள்கொளலாவது, நாளும் முகூர்த்தமும் தனக்குப் பொருத்தக் கொண்டு தான் புறப்பட்டுச் செல்லவேண்டிய காலத்திற் புறப்படமுடியாதபடி தடையேற் பட்ட விடத் துத் தனக்கு இன்றியமையாது உடன்கொண்டு செல்லு தற்குரிய பொருளைக் குறித்த நல்ல நாளிலே அத்திசை நோக்கித் தனக்கு முன்னே செல்ல விடுதல் ஆகும்.

2. மடை அமை ஏணி-மீ திடு பலகையுடன் பொருத்துதல் அமைந்த ஏணி. மடை-மடுத்தல்; பொருந்துதல்.

மயக்கமாவது, புறத்தோரும் அகத்தோரும் தம்மிற் கலந்து பொருதல். 3. கடைஇ-கடவி; செலுத்தி. கடவுதல்-செலுத்துதல்.

4. இது புறத் தோன் உள்ளத்தைக் காத்த நொச்சி’ என்றிருத்தல் வேண்டும்,