பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கக § joi...of

கோளும், அங்ங்ணம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்:

பிற்பட்ட துறைக்குப் புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர் போல இடை மதிலினும் போர் கூறினார்.

நீர்ச்செரு வீழ்ந்த பாசியும்-கொண்ட மதிலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத் தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக் கிடங்கின்கட் போரை விரும்பின பாசியும்:

பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் பாசி யென்றார். வேறு வேறு வருமெனினுங் காண்க. அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்-அம்மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப் பாசி மறனும்:

பாசியென்றார் நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் துர்ந்தும் பொருதலின்.

அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கமும்-புறஞ்சேரி மதிலும் ஊரமர் மதிலும் அல்லாத கோயிற் புரிசைகளின் மேலும் ஏறி நின்று போர் செய்தற்குப் பரந்து சென்றோன் கூறுபாடும்;

இகன் மதிற் குடுமி கொண்ட மண்ணும் மங்கலமும்அங்ங்னம் இகல்செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெய ரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும்;

வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற-இருபெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்றவாளி னைக் கொற்றவைமே னிறுத்தி நீராட்டுதலோடே கூட:

1. மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை’ என்ற தொடரை, அகத்தோ னுக்குரிய துறையாகப் பொருள்கொள்ளக்கருதிய நச்சினார்க்கினியர், மற்ற தன் புறத்தோன் என்பதனை, மற்று புறத்தோன தன் என இயைத் து ஐயுருவ, விரித்து மற்றுப்புறத்தோன தனை அகத்தோன் வீழ்ந்த புதுமை’ எனவே வேண்டுஞ்சொல்வருவித்து, புறத்தோன்கொண்ட அவ்விடத்தினைப் பின்னை அகத்தோன் தான் விரும்பிக் கொண்ட புதுக்கோளும்?’ எனப் பொருள் வரை ந் துள்ளார். இங்கனம் ஒரு தொடரினை விகுதியும உருபுமாகப் பிரித்துத் தாம் வேண்டியவாறு முன்னும பின்னும் கூட்டிப் பொருளுர்ைத்தல் உரை நெறியன்மை யின், இத்தொடர்க்கு நச்சினார்க்கி னியர் கூறும்ப்ொருள் தொல்காப்பியனார் கருத் துக்கேற்புடையதன்றென் க.

2. குடுமி’ என்பதற்கு முடிக்கலம் எனப் பொருள் கொண்டார் நச்சினார்க் கினியர்,

3. வென்றவாளின் மண்-வெல்லுதற்குக் கருவியாகிய கொற் ற வ1ளிக்க ண நீராட்டுதல். ஈண்டு மண்ணுதல் என்னுந் தொழிற்சொல் மண் எனப்பகுதியை வாய் நின்றது.