பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Ꮬfö_ Ꮽ# தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஒன்றென முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை மண்ணுதல் கொள்க.

தொகைநிலை" என்னுந்துறையொடு த்ொகைஇ-அவ்வாண் மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக் கடற் கெல்லாஞ் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுந் துறையோடு முற் கூறியவற்றைத் தொகுத்து;

வகைநால் மூன்றே துறை என மொழிப-அங்ஙனம் ஒன்று இருவகைப்பட வந்து பன்னிரண்டேயாம் உழிஞைத் துறை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

முற்றலையுங் கோடலையும் இரு வகையென்றார். துறை யென்றதனான் அவற்றின் பகுதியாய் வருவனவும் அத் துறைப் பாற் படுத்துக உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும் அவர் அரசர்க்கு உரைப்பனவுங் குடைச்சிறப்புக் கூறுவனவும் முரசு முதலியன நாட்கோடலும் பிறவுங் குடைநாட் கோடலாய் அடங்கும். இது வாணாட் கோடற்கும் ஒக்கும். பொருவார்க் கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொதுவாகலின் முற்கூறி மேல் வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற் கூறினார். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார்: எயிலுட் பொருதலும் புட்போல உட்பாய்தலும் ஆண்டுப் பட்டோர் துறக்கம் புகுதலும் பிறவும் பாசிமறத்தின்பாற் படும். ஏறுந் தோட்டியுங் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற்படும். படிவம் முதலியன கூறல் குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின்பாற் படும். புறத்தோன் இருப்பிற்.றொகைநிலைப்பாற்படும். துறையென மொழிப' என எல்லாவற்றையுந் துறையென்று கூறுகின்றவர் தொகைநிலை யென்னுந் துறையெனத் தொகை நிலையை விதந்தோதினார் அது பலவாகாது இரண்டு துறைப்பட்டு வேறுவேறு துறையாம் என்றற்கு. அது தும்பைத் தொகைநிலைபோல் இருபெரு வேந் தரும் உடன் வீழ்தலுஞ் சிறுபான்மை உளதாமென்றுணர்க." எதிர்செல்லா தடைத்திருந்தோன் புறப்பட்டுப்படுதல் சிறுபான்மை

(பாடம்) ஒன்றின?.

2. இங்கு உழிஞைத் திணைக்குரியதாக அமைந்த தொகைநிலை என்பது, பரந்து சென்று போரியற்றி வெற்றிகொண்ட படைவீரர்க்கெல்லாஞ் சிறப்புச் செய்தல் வேண்டிப் படைவீரர் எல்லாரும் ஒருங்கே வருக என ஒருசேரக் கூட்டுதல்.

3. தும்பைக்கண் வரும் தொகைநிலை என்பது, போரில் எதிர்த்து நின்ற இருபெருவேந்தரும் போர்க் களத்தில் ஒருசேர இறந்துபடுதல். -