பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கக &#。一翌。

யாதலின், இதனையும் வேறொரு துறையாக்கிப் பதின்மூன் றென் வினாராயினார்.

இது வேறுவேறு வருதலுஞ் சிறுபான்மை. இன்னுந் துறை யென்றதனானே புறத்தோன் கவடிவித்துதலுந் தொகைநிலைப் பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க.

அது, 'மதியேர் வெண்குடை' என்னும் (க.க.உ) புறப்பாட் டினுள்,

'வெள்ளை வ: குங் கொள்ளும் வித்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றென னாக' என வரும்.

ஒன்ற வென்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறு பான்மை என்று கொள்க.

இனி மகண்மறுத்தோன் மதிலை முற்றுதன் மகட்பாற் காஞ்சிக்கண் அடங்கும். யானையுங் குதிரையும் மதிற்போர்க் குச் சிறந்தன அன்மையிற் கொள்ளாராயினர். ஈரடியிகந்து பிறக் கடியிடுதலுங் கேடு என்று உணர்க." (காட)

பாரதியார்

கருத்து :- உழிஞைத் திணைவகை மேற்கூறி, இதில் அதன் துறைவகை பன்னிரண்டும் குறிக்கப்படுகின்றன.

பொருள் :- (1, 2) குடையும், வாளும், நாள்கோள்-வேந்தன் கொற்றக் குடையும், வெற்றிப் போர் வாளும் முறையே நன்னாளில் எடுத்துக்கொள்ளுதலும்.

அன்றி-அல்லாமலும். 3. மடையமை ஏணிமிசை மயக்கமும் . தொடையமைந்த ஏணிப் படிகளின் மேல் ஏறுவோரும் எதிர்ப்போரும் தம்முள் கலந்து மலைதலும். (மடை-பூட்டு, ஏணிப் பக்கச் சட்டங்களில் பழுக்கள் பூட்டப்படுதலால், மடையமை ஏணி எனப்பட்டது).

1. மகள் மறுத்தோனது மதிலை வளைத்துக்கொள்ளுதல் உழிஞைத்திணை யாகாது; மகட்பாற் காஞ்சியென்னுந் துறையின் பாற்படும் என்பது கருத்து.

2. யானையும் குதிரையும் மதின்மேல் ஏறிப் பொருதற்குச் சிறந்தன. அன்மையின், அவை உழிஞைத்திணை யில் இடம் ப்ெறவில்லை; மதிலை வளைத்து முற்றுகையிடுந் திறத்தில் இரண்டடி கடந்து பின் வாங்குதலும் போர்த் தொழில் குக் கேடு பயத்தலின் பின் னடியிடும் இயல்பினவாகிய யானையும் குதிரை யும் உழிஞைப் போரிற் சிறப்பிடம் பெறாமையிற் கூறப்படவில்லை. என்பது கருத்து. எனினும் பகைவரது அரண் சா வலையழித்தற்குரிய உழிஞைப்போரில் யானைப் படையும் ஈடுபடுத்தப்பெற்றன என்பது பதிற்றுப் பத்துப்பாடல்களாலும் புற நானு ற்றுப் பாடல்களாலும் உய்த் துணரப்படும், - - ت.