பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக & 空 &

கன்றிப் பிறமன்னர்க்குச் சான்றோர் செய்யுட்களில் கேட்கப்படா அருநிகழ்ச்சியாதலானும், இங்கு மதிற்குடுமி என நின்றாங்கே நேர்பொருள் கொள்ளுதலே அமையும். முற்றியோர் எபிற்குடுமி கொள்ளுதல், மேற் பெரும்பாண் அடிகளிலும் மற்றும் பல பழஞ் செய்யுட்களிலும், பரக்க வருவதனாலும், இதுவே தொல்காப் பியர் கருத்தாதல் தேற்றமாகும்.)

11. வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற உழிஞைப் போரில் வென்றோர். வெற்றி தந்த வாளை நீராட்டும் விழவுடன் பொருத்த; (மண்ணுதல் - கழுவுதல்)

போர்க்கு உரைஇப் புகன்று கழித்தவாள் உடன்றவர் காப்புடை மதில ஆழித்தலின் ஊனுறு முழ்கி உருவிழந் தனவே. =LDLiు, ఈ 37

(இங்கு வாளை வெற்றிதரும் படைக்கலங்களுக்குப் பொதுக் குறியீடாகக் கொள்ளுதல் சால்புடைத்தாகும். வாளைப் போலவே வேலும் பண்டை மறவர் கொண்ட போர்ப் படை யாதலின், வென்றபின் வேல்கழுவி விழ வெடுத்தலும் இத்துறையே யாகும் )

12. ஒன்ற, தொகைநிலை யென்னும் துறையொடு தொகைஇ - (வென்ற வாளை நீராட்டும் விழவொடு) பொருந்த, தோற்றோர் தொகுதித்தொலைவாம், தொகைநிலை என்னும் துறையொடுகூட்டி:

மக்கள் தொக்கதொகுதியாய்த் தொலைவதையே தொல் காப்பியர் காலப் புலவர் தொகைநிலை' என வழங்கினர் என்பது, தும்பைத்திணைத் துறைவகையில் தொல்காப்பியர் சுட்டும் தொகைநிலைக் குறிப்பாலினிது விளங்கும். ஒருவரு மொழியாத் தொகைநிலை என்பது ஆங்கவர்தரும் தொகைநிலை’க் குறிப் பாகும். உழிஞையிலும் தோற்றோரின் தொகையழிவே வென் றோர் விழவொடு ஒன்றுவதாகும்.

இனி, இதில் தொகைநிலைக்கு நச்சினார்க்கினியர் வேறு பொருள் கூறுவர். போர்முடிவில் வென்றோர் விழாது நின்றோ ரைத் திரட்டி, புண்புறம் பொதிந்தும் தண்மொழி பகர்ந்தும், அவர் திறம்வியந்தும், தளர்வோரை ஊக்கியும் பாராட்டுவது 'தொநிைலை' என்பதவர் கருத்து. தொகை கூட்டம் குறிக்கு மாதலின், அவ்வாறு கொண்டார் போலும்.)