பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曲ó岛 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

இஃது அத் தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது.

(இ-ஸ்.) மைந்து பொருளாக வந்த வேந்தனை -தனது வலி யினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறுபொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை, சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்றென்ப -அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய மைந்தேதான் பெறுபொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்குஞ் சிறப்பினையுடைத்து அத் தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.

வரல் செலவாதல் செலவினும் வரவினும்’ (தொல்-சொல். கிளவி-உ அ) என்பதன் பொதுவிதியாற் கொள்க. மைந்து பொரு ளாக என்பதனை வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக; அஃது இருவர்க்கும் ஒத்தலின் எனவே இருவரும் ஒருகளத்தே பொருவாராயிற்று."

இது வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் ஏனை யோர்க்குங் கொள்க; அவரும் அதற்குரியராதலின்.

இதனைச் சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனையாற் கொல்வனவுத் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவுங் கடையூழிக்கட்டோன்றிய ஆதலிற் சிறப்பில வாம். அவையுஞ் சிறுபான்மை கொள்க." (கடு)

அருள்பற்றிப் போரின்கண் ஒருவர் ஒருவரை நோக்கி இரங்குதல், போரிற் பலரும் இற்ந்த நிலைமைக்கண் கண்டோர் இரங்குதல் முதலிய காரணங்களால் நெய்த்ல் என்னும் அகத்திணைக்குத் தும்பை புறனாயிற்று என்பதாம் .

1. தும்பை தானே, மைந்துபொருளாக வந்த வேந்தனை (மைந்து பொரு ளாகச்) சென்று தலையுழிக்கும் சிறப்பிற்று என இயையும் வந்தும் சென்றும் தலையழித்தலாகிய இச்செயல், அவ்விருவர் க்கும் ஒத்ததாதலின், இருபெருவேந் தரும் ஒரு களத்தே பொருவது தும்பையென்னுந்திணையாம் என்றவாறு .

மைந்து-வன் மை. தலையழித்தல்-தலைமை தீர்த்தல்; யானே வன்மை யுடையேன் எனப் பகைவேந்தன் கொண்ட செருக்கினை ஒழித்தல், சிறப்பிற்றுசிறப்பினை யுடையது.

2. தம்முள் முரண்பட்ட வேந்தர் இருவரும் தத்தமக்கு இயல்பாக அமைந்த வன்மையொன்றையே துணையாகக் கொண்டு ஒருகளத்துப் போர் புரிதலாகிய இத்தும்பைத் திணை யினையே சிறப்புடையது எனத் தொல்காப்பியனார் கூறுத லால், இவ்வாறன்றிப் போர்முறையிற் பிறழ்ந்து வஞ்சனையாற் கொல்வனவும் தெய்வங்கள் பாற் பெற்ற வரத்தினாற் கொல்வனவும் ஆகிய போர்ச் செயல்கள் தொல்காப்பியனார் காலத்திற்குப் பின் கலியூழிக்கண் தோன்றியன எனவும் அவை சிறப்பில எனவும் வரும் நச்சினார்க்கினியர் கூற்று, பாரத காலத்துக்கு முற்பட்டவர் தொல்காப்பியனார் என்னும் அவர் தம் கொள் கையினைப்

  • புலப் படுத்துவதாகும்.