பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ද් ද් ද් தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஆய்வுரை

நூற்பா. க உ. இது, தும்பைத்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது.

(இ-ள்) தும்பை என்னும் திணை நெய்தல் என்னும் அகத் திணைக்குப் புறனாகும். தனது போர் வன்மையினை உலகத்தார் உயர்த்துப் புகழ்தலையே பொருளாகக் கருதிப் போர்மேற் கொண்டு வந்த வேந்தனை மாற்றானாகிய வேந்தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் சிறப்பினை யுடையது தும்பைத்தினையாம் என்பர் ஆசிரியர்-எ-று.

தும்பை என்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். தத்தமது ஆற்றலை உலகத்தார்க்குப் புலப்படுத்திப் புகழ்பெறுதல் ஒன்றையே நோக்கமாகக்கொண்டு எத்தகைய சூழ்ச்சியும் இன்றி இருபெருவேந்தரும் இருதிறத்தார்க்கும் ஏற்புடைய ஒருகளத்திலே போர்செய்ய வேண்டுதலால், அதற்கு ஒத்த இடம் காடும் மலையும் வயலும் ஆகாமையானும், நெய்தற்குரிய பெருமணலு லகம் போலக் களரும் மணலும் பரந்த வெளிநிலத்துப் போர்செய் தல் வேண்டுதலானும் நெய்தற்றிணைக்குரிய எற்பாடு போர் முடியும் பொழுதாகலானும், இரக்கவுணர்வும் தலைமகட்கே பெரும்பான்மையுளதாயவாறு போ ல க் கணவனையிழந்த மகளிர்க்கேயுளதாவதன்றிப் போர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள வீரர்க்கு இரக்கமின்மையானும், அத்தகைய வீரக்குறிப்பின் பயனாய்த் தோன்றிய அருள்பற்றிப் போரின்கண் ஒருவர் ஒருவரை நோக்கி இரங்குதல் உளதாம் ஆதலானும், வீரராயினார் தமது நாட்டினைக் காக்கும் குறிக்கோளுடன் தமது வீரத்தை நிலை நிறுத்திப் போர்க்களத்து இறந்த நிலையில் அதுகண்டு அவரைப் புரந்தோராகிய வேந்தரும் நாட்டு மக்களும் கண்ணிர் மல்க இரங் குவர் ஆதலானும் நெய்தல் என்னும் அகத்திணைக்குத் தும்பை புறனாயிற்று.

இருபெரு வேந்தரும் ஒருகளத்துப் பொருது தமது பெரு வன்மையினைப் புலப்படுத்தும் நிலையிற் போரில் ஈடுபட்ட படை வீரர்களின் தறுகண் ஆண்மையினைப் பலரும் அறிய விளக்கும் சிறப்பு இத் தும்பைத்திணைக்கே யுரியதாதலின் 'சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற்று என்றார் ஆசிரியர்.

தலையழித்தல்-தலைமையைக் கெடுத்தல்.