பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கா. கடுக

அரண்கோடலுமன்றி மைந்துபொருளாகச் சென்று துறக்கம் வேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று.

மேற்காட்டுந் துறைகளெல்லாம் இச் சூத்திரத்துக் கூறிய இரண்டற்கு மன்றி மைந்து பொருளாயதற்கேயா மென்றுணர்க.

உதாரணம்:

"நெடுவேல் பாய்ந்த மார்பின்

மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே’’ (புறம்-உசு எ)

'எய்போற் கிடந்தானென் னேறு'

(புறப்பொருள்-வெ-கஎசு) என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன.

கிடந்தானென்புழி நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கை யாயிற்று.

'வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன. தங்குறை-மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர் விடாப் பாய்ந்தன மேன்மேற் பல'

(பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு-அமர்)

இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை. "பருதிவேன் மன்னர் பலர் காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய-வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே யென்று.' இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாம் இருநிலந் தீண்டா

QI ప}&5,

இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றிணையெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும் படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறிய தாமென் றுணர்க. - (கசு)

சென்ற உயிர்-சிறிதொழியத் தேய்ந்த நிலையில் உடலைப் பற்றி நிற்கும் உயிர். நின்றயாக்கை- துளக்கமின்றி நிலை நின்ற உடம்பு. சென்றவுயிரின் நின்ற யாக்கை, இரு நிலந்தீண்டா அருநிலை வகை என்னும் இச்சிறப்பியல்பு, தும்பைத்திணைக்கெல்லாம் பொதுவன்மையின் திணையெனவும் படாது; தும்பைத்திணைக்கே சிறு பிலக்கணமாதலின், துறையெனவும் படாது, துறைப் பொருள் நிகழ்ந்து முடிந்தபின் அதன் சிறப்பினைக் கண்டோர் கூறியதாகவே கொள்ளப்படும் என்பது கருத்து,