பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடுஉ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

பாரதியார்

கருத்து :- இது, தும்பைத்திணையின் ஒரு சிறப்புணர்த்து கிறது.

பொருள் : கணையும் வேலும் துணையுறமொய்த்தலின்அளவிறந்த அம்பும் வேலும் செறிந்து அடர்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை, (அருநிலைவகை-பிரிந்த உயிரினின்றும் நீங்கிய பின்னும் வீழாதுநின்ற உடலின் அரிய நிலைப்பரிசு; இருநிலந் தீண்டா அருநிலைவகையொடு - (அறுபட்டதலை முதலிய உறுப் புக்கள்) பெருநிலம் படியாது முறுகிய இகல் முனைப்பால் துடித் தியங்கும் அரிய நிலைமையாகிய பரிசுடன்; இருபாற் பட்ட ஒரு சிறப்பின்றே-இவ்விரண்டு கூறுபட்ட ஒப்பற்ற சிறப்பினையுடைத்து தும்பைத்திணை.

குறிப்பு :- ஈற்றேகாரம்.அசை. இன்-உருபிரண்டில் முன்னது ஏதுப்பொருளிலும், பின்னது நீங்கற் பொருளிலும் வந்தன.

முறுகிய தறுகண் முனைப்பால் உயிரிழந்த உடல் வீழாது நிற் றலும், துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் நிலந் தோயாமல் துடித்தியங்கலும், ஆகிய இருவகை அரிய நிலையைச் சிறப்பாக உடையது தும்பைத்திணை.

இருநிலந் தீண்டாததிது எனக் குறியாமை, சிறப்பாகத் தலை துடிப்புடன் இற்ற உறுப்பெதுவும் துடிக்கும் இயல்யிற்றாகலின் கட்டிக் கூறல் வேண்டாமைபற்றி அமைந்தது.

அன்றியும், சென்ற உயிரினின்றயாக்கை எனப் பிரித்து, 'இருநிலத் தீண்டா அருநிலை வகையோடு, இப்பாற்பட்ட ஒரு சிறப்பின்று’ எனக் கூட்டியதால், யாக்கையும் அதன் அறுபட்ட உறுப்பும் தனித்தனி சுட்டுங்கருத்துத் தெளியப்படும். (இங்கு, "அரு' என்பதை அட்டை எனக்கொண்டு, அதன் பின்வரும் இரு பாற்பட்ட' எனுந் தொடரை அவ்வட்டைக்கு அடையாக்கி, இரு கூறுபட்ட அட்டைப் பகுதிகள் தனித்தனி ஊர்ந்து இயங்குவது போலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் இயங்குவதுபோலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் தனித்தனி துடிக்கும் எனப் பொருள் கூறுவர் பழைய உரைகாரர். இரண்டின் மேற்பட வெட்டுண்ட அட்டைத் துண்டுகளும் துடிப்ப தியல்பாதலால், இரு பாற்பட்ட என்பது பொருளற்ற தாகும். அன்றியும் ஊர்ந்து செல்லுதல் நிலமிசையே யாழாதலால் அது இருநிலந் தீண்டா அரு