பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கச ஆடுக

அதனெழுச்சியும், அரவமும், அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக் கண்டு இடை நின்றோர் போரை விலக்கலும் அவர் அதற்குடம்படாமைப் போர் துணிதலும், அத் தானையுள் ஒன்றற் கிரங்கலும், அதற்குத் தலைவரை வகுத்தலும், வேந்தன் சுற்றத் தாரையுந் துணை வந்த அரசரையும் ஏத்துவனவும், நும்போர் ஏனைநாட்டென்றலும், இருபெருவேந்தரும் இன்னவாறு பொருது மென்று கையெறிதலும் போல்வன வெல்லாம் இத்துறைப்பாற் படும்."

உதாரணம் :'கார்கருதி நின்றதிருங் கெளவை விழுப்பணையான் சோர்குருதி சூழா லனநினைப்பப்-போர்கருதித் துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து.'

(புற-வெ.மாலை-தும்பை-க) இது பூக் கூறியது. இதனைத் திணைப்பாட்டு மென்ப."

வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையுங் கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான்-பல்புரவி நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூனான் படைக்கு.'

(புற-வெ-மாலை தும்பை.உ) இது சிறப்புச் செய்தது. 'வயிர்மேல் வளை நால வைவேலும் வாளுஞ் செயிர்மேற் கனல்விழிப்பச் சிறி-யுயிர்மேற் பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க் குலகழியுமோர்த்துச் செயின்.'

(புற-வெ.மாலை-தும்பை.க) இது விலக்கவும் போர் துணிந்தது. 'மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை பொன்னார் நடுங்க வுலாய் நிமிரி னென்னாங்கொ லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப் பாழித்தோண் மன்னர் படை.'

(புற-வெ-மாலை-தும்பை.டு)

i. இத்துறைப்பாற்படும்-தானை நிலை என்னும் இத்துறையில் அடங்கும்.

2. துமபைவர சூடிய பூக்கூறிய இவ்வெண்பா, புறப்பொருள் வெண்பா மாலையில் தும்பைத்தினைக்கு இலக்கியமாக இயற்றப்பெற்றமையின் திணைப் பாட்டு எனப்பட்டது.