பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கசு 0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்- உரைவளம்

இஃது இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது. "கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலு மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக்-கங்கை சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார் மறுவந்தார் தத்த மனம்.” இது பெருந்தேவனார் பாட்டு; குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது.

இஃது உதவியது :இனி யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய் வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும் படைத்தலைவர் மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலுங் களிற்றின்மேலுந் தேரின் மேலுங் குதிரை சேறலுந் தன்மேலிருந்து பட்டோருடலை மோந்துநிற்றலும் பிறவுமாம்.

இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர்யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க. புறநானூற்றுள் தனித்து வருவனவுங் கொள்க.

வேன்மிகு வேந்தனை மொய்த் தவழி ஒருவன் தான் மீண் டெறிந்த தார்நிலை-தன்படை போர் செய்கின்றமை கண்டு தானும் படையாளர்க்கு முன்னே சென்று வேலாற் போர்செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி அது கண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன் றானைத்தலைவனாயினும் தனக்குத் துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டு வந்ே வேந்தனோடு பொருகின்றாரை எறிந்த தார்நிலைக்கண்ணும்;:

தாரென்பது முந்துற்றுப் பொரும்படையாதலின் இது தார் நிலையாயிற்று.

"நிரப்பாது கொடுக்கும் என்னும் (கஅ0) புறப்பாட்டினுள் 'இறையுறு விழுமந் தாங்கி' என்பதும் அது.

அன்றியும் இருவர் தலைவர்" தபுதிப்பக்கமும்-இருபெரு வேந்தர் தானைத்தலைவருந் தத்தம் வேந்தர்க்காகித் தார்

1. குருக்கள்-குருகுலத்த சராகிய துரியோதனன் முதலியோர். 2. தார் என்பது, முன் ன ரிையில் நின்று போர்செய்யும் சேனையைக் குறித்த பெயர். ண்டு முன்னின்று போர்புரியும் தன் வேந்தனைக் காத்தற்கு முந்துற்று முன்னணிச் சேனையிற் சென்று போர்புரியும் வீரனொருவனது நிலையைக் குறித் தலின் தார் நிலை என்னும் பெயர்த் தாயிற் று.

3. இருவர் தலைவர்-இருபெருவேந்தருடைய படைத்தலைவர், த புதிசாதல்