பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கச க சுடு

5. இருவர் தபுதிப் பக்கமும்-எதிர்த்து மலையும் இருபடைத் தலைவரும் தம்முள் பொருது கெடும் பரிசும்;

(தபுதி-இழவு அல்லது கேடு. இது கெடுதல் குறிக்கும் தபு என்னும் முதனிலை யடியாகப் பிறந்த தொழிற் பெயர்)

6. ஒருவன், ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய, எருமையும்-ஒரு மறவன் தன் தலைவனை அவன் உடைபடையுட் புகுந்து (அதன் பின்னணியைத் தாக்கும் பகைவரைத் தகைந்து) ஏமமுறக்காக்கும் தளராத் தறுகண்மையாகிய எருமைமறமும்;

(கூழை - பின்னணி, தாங்கல்-தடுத்தல் அல்லது பேணுத லாம். இதில் தாங்கல் வினையை ஒருவனுக்கும் கூழைக்கும் தனித்தனிப் பிரித்துக் கூட்டுக. முறியுந் தம் படையின் பின்னணி யைப் பகைவர் தாக்காது காத்தலும், அப்படை முடிய அடர்த்த பகைவரை எதிர்த்துத் தடுத்து நிறுத்தலும் ஒருவன் அருந்திறலான் தானும், அத்திறலுடை மறவன் (எதிர்வரும் எதற்கும் அஞ்சாது அசையாது நிலைத்து நிற்கும் எருமைபோல) தான் ஒருவனாய்த் தளராது எதிர்த்துவரும் படையைத் தாங்கும் தறுகண்மை வியத் தற்குரிய தாதலானும், அவன் திறம் எருமை மறமெனப் பட்டது. உடையும் படையின் பின்னணி தாங்கித் தொடரும் பகைஞரைத் தாக்கித் தகையும் தறுகண்மை எருமை மறம் எனப்படும்.)

7. படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும்-மேல் வரும் பகைப் படைக்கலங்களை அழித்து மதுகைகொள்ளும் பாது காவலானும் (பாழி-மதுகை, வலி பெருமையுமாம்)

8. களிறெறிந்து எதிர்ந்தோர் பாடும்-மேல்வரும் பகைவர் யானையை எதிர்த்தேறும் மறவர் பெருமையும்,

9 களிற்றொடுபட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் ஊர்ந்த யானையொடு எட்டழிந்த மன்னனை, வென்று கொன்ற மன்னனின் வாள் மறவர் சூழ்ந்தாடும் ஆர்ப்பும்; (அமலுதல்-நெருங்குதல். ஈண்டு அமலை பலர் நெருங்கி ஆர்க்கும் ஆரவாரத்திற்கு ஆகுபெய ராயிற்று.)

10 வாள் வாய்த்து இருபெரு வேந்தரும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்-வாட்புண் பெற்று இகலும் பெருவேந்தர் இருவர் தாமும் தமக்குத் துணையாம் தமரும் ஒருவருந் தப்பாமல் மாய்ந்தழியும் தொகைநிலை என்னும் துறையும்; (இதில்வரும் தும்பைத் தொகைநிலை, முன் சுட்டப் பட்ட உழிஞைத்துறையான தோற்றோர் தொலைவு குறிக்கும்