பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கச & or of

களிற்றினை எறிந்து வீழ்த்திப் பகைவரை எதிர்த்துப் போர் செய் தோர் இறந்துபடுதலும், களிற்றுடன் பொருது இறந்துபட்ட வேந்தனைக் கொன்ற வேந்தனுடைய வாட்படைவீரர் நெருங்கிப் பாடியாடும் அமலையும், வாளாற் செய்தற்குரிய போர்த் தொழிலில் முற்றி இருபெரு வேந்தர் தாமும் அவர்களைப் பிரியாது சூழ்ந்த சுற்றத்தாரும் ஒருவரும் தப்பாமற் போர்க் களத்தில் இறந்துபட்ட தொகைநிலையும், போர்க்களத்துத் தன் வேந்தன் பொறாது இறந்துபட அதுகண்டு வீரனொருவன் சினந்து எழுந்து (தன்வேந்தனது வீழ்ச்சிக்குக் காரணமாய் நின்ற) வீரன் ஒருவனை நெருங்கிப் பொருத நல்ல புகழ்நிலையும், பல படைகளும் ஒருவனுக்குத் தோற்று ஒடுதலால் அவன் தன்னெதிர்ப் பட்ட பகைவர்களைத் தனது ஒளிமிக்க வாட்படையினாற் கொன்று குவித்த நூழிலும் உட்படப் பொருந்தித் தோன்றும் பன்னிரு துறைகளையுடையது தும்பைத் திணை எ-று.

தானை-காலாட்படைவீரர். நோனார்-பகைவர் செய்யும் போர்த்திறங்களைப் பொறுத்து எதிர்நிற்கும் வன்மையில்லாதவர்; பகைவர். உட்குதல்-நெஞ்சம் நடுக்குறுதல், மூவகை நிலை யாவன தானைநிலை, யானைநிலை, குதிரைநிலை என்பன. தார்-முன்னணிப்படை தூசிப்படை, தபுதி-இறந்துபடுதல். உடைதல்-எதிர்த்து நிற்றலாற்றாது சிதறப் பின்னிடுதல். கூழை-பின்னணிப்படை. தாங்குதல்-பின்னிடாது தடுத்து நிறுத்தல் எருமைக்கடாப் போன்று அசையாது தடுத்து நிற்றலால் கூழை தாங்கிய எருமை எனப்பட்டது. "கூழை தாங்கிய பெரு மையும்" என்பது இளம்பூரணர் உரையிற் கண்ட பாடம். இதனை ‘எருமை மறம்’ என்றது துறையாக ஐ யனாரிதனார் குறிப்பிடு தலால் கூழை தாங்கிய பெருமை என்ற பாடமே அவர்காலத்து வழங்கிய தொன்மையுடையதெனத் தெரிதலின் கூழை தாங்கிய பெருமை’ எனவே பாடங்கொண்டார் நச்சினார்க்கினியர், பாழிஉடலின் வன்மை. பாடு-இறந்துபடுதல். வாள்வாய்த்துவாளால் செய்யும் போர்த்தொழில். முற்றி வாட்படைக்கு இலக் காகி எனப் பொருளுரைப்பினும் அமையும். வீரனொருவன் பலரையுங்கொன்று குவித்தலை நூழில்’ என்பர். ஈண்டு, ஒருவரும் ஒழியாத் தொகைநிலை என்றது, போர்க்களத்திற் பொருவோர் எல்லாரும் ஒருவரும் எஞ்சுதலின்றி இறந்துபட்ட நிலையை,