பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஎ0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

களை; பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப-இருவகைப்பட மிகுதிப் படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு."

இருவகையாவன, தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும் பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் உறழ்ச்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னாது படுத்த லெனப் பிறவினையாற் கூறினார், அவர் தம்மினுறழாதவழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோன் இவனென்றுரைத்தலும் வாகையென்றற்கு ஒன்றைேடு ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத் தினை நன்றென்றாற்போல உலக முழுதும் அறியும் உயர்ச்சியுடை மையும் அது தாவில் கொள்கையெனவே இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றா யிற்று.” (க.கூ)

பாரதியார்

கருத்து :- இது, வாகைத்திணை பாலை என்னுமகத்

திணைக்குப் புறனாமென வுணர்த்துகிறது.

பொருள் :- வெளிப்படை, குறிப்பு :- ஏகாரம், முன்னது பிரிநிலை; ஈற்றது அசை. பாலை அறக்காதலை வளர்த்து மீட்டும் இன்பத்தை

மிகுப்பது போல, வாகை மறக்காதலை வளர்த்து வெற்றியின்பம்

1. தா இல் கொள் கை - வலியும் வருத்தமும் இன்றித் தன்னியல்பில் நிகழும் ஒழுகலாறு தத்தம் கூறு-தத் தமக்கு இயல்பாயமைந்த அறிவு, ஆண்மை, தொழில் பற்றிய கூறுபாடுகள பாகுபட-பகுதிப்பட3 இருவகைப்பட. இருவகை யாவன: தன் னைத் தானே மிகுதிப்படுத்தி உயர்தலும், பிறர் மீக்கூறுபடுத்தி ஏனையோ ரின் உயர்த்துப் புகழப்படுதலும் ஆகும். இவ்விரு வகையுள் தன்னியல் பாகப்பெற்ற வென்றியை முல்லையெனவும், உறழ்ச்சியாற்பெற்ற வென்றியை வாகையெனவும் வழங்குதல் தொல்காப்பியனார் காலத்திற்குப் பின் தோன்றி நிலைபெற்ற புறத்திணை மரபாகும்.

ஒப்புடையோர் தம்மின் உறழா த நிலையினும் ஒருவன து உயர்ச்சி

குறித்து, அவன் அவர்களை உறழ்ந்து உயர்ந்தான் எனப் பிறர் தன்னை உயர்த்துக் கூறும் வண்ணம் வென்றுயர்தலும் வா கைத்திணை யோம் என அறிவித் தற்கு மிகுதிப்படுதல்’ எனத் தன் வினையாற் கூறாது மிகுதிப்படுத்தல்? எனப்பிறவினையாற் கூறினார் தொல்காப்பியனார்.

2. எல்லா மணிகளிலும் சிறந்த மாணிக்கமணியின் இயல்பாகிய உயர்ச்சி யினைக் கூறுவோர் அதனைப் பிறிதொரு மணியுடன் ஒப்பிட்டுப் பிரித்துக் கூறாது இயல்பாகவே நன்று என உயர்த்துக் கூறுமாறுபோல, உலக முழுவதும் அறியும்படியமைந்த ஒருவரது உயர்ச்சியுடைமையும் வாகைத்திணையம் என்பது *@点岛。

3. தா’ என்பது, வலி வருத்தம் என்ற பொருளில் வழங்கும் உரிச்சொல் லாகும். கொள்கையாவது, ஒருவர் உயர்ந்ததென மேற்கொண்டொழுகும் ஒழுக லாறு. தா.இல் கொள்கை’ என்பதற்கு, வலியும் வருத்தமும் இன்றி ஒருவர் க்கு இயல்பாகவேயமைந்த மிகுதிப்பாடு என்பது பொருள். எனவே இரணியனைப் பொன்று பிறரைத் துன்புறுத்தித் தன்னைப் பிறர் உயர்த்துப் புகழும்படி செய் வித்துக்கொள்ளுதல் உண்மையான வாகைத்திணையாகாது என்பது புலனாம்,