பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கடு ᏜᎶT &h

விளைப்பதாலும், பாலைபோல வாகையும் நிலம் வரைவின்றி யாண்டும் நிகழுமாகலானும், பாலைக்கு வாகை புறனாயிற்று.

கடு. (அ) கருத்து :- இது, வாகைத்திணை இயல் விளக்குகிறது. பொருள் :- தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை-குற்ற மற்ற கோட்பாட்டளவில் மக்கள் அவரவர் துறையில்; பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப-வகைபடவிஞ்சும் விறலை வாகை என்பர் புறநூற் புலவர்.

குறிப்பு :- இங்கு வாகைச் சொல் கொண்ட பொருட் டொடர்பாலும், புறநூற் புலவர்' எனும் எழுவாய் அவாய் நிலை யானும் கொள்ளப்பட்டன.

இழிவொடு பழிபடு மெல்லாத்துறையும் வெறுத்துவிலக்க வேண்டுமாதலின், அவற்றை நீக்கத் தாவில் கொள்கை என்றடை கொடுத்துப் புரைதீர் திறலெதுவும் வாகைக் குரித்தென வரை யறுத்துத் தெளிக்த செவ்வி வியத்தற்குரியது.

அவரவர் துறையில் பிறருடனுறழ்ந்து மேம்படு வெற்றி பெறுதல் வாகை எனப்படும். உறழ்பவரின்றி ஒருதுறையில் ஒப்பற்றுயரும் பரிசும் வாகையேயாகும். மேம்பட்டு வீறு பெறு தலே வாகையாகலின், அதற்கு உறழ்ச்சி (போட்டி) இன்றியமை யாததன்று. இசைபடப் புகழும் பாடாணின் வேறாய், உறழ் வாரை வென்றுயரும் வீறும் எதிர்ப்பின்றி ஒருதுறையில் மேம்படும் விறலும் ஒப்ப வாகை வாகையி லடங்கும்.

செய்யுள் :- 1 ஒருவனை ஒருவன் அடுதலும் தொ ைல தலும் எனும் இடைக்குன்றுார் கிழார் புறப்பாட்டிறுதியடிகள், ஒத்தாரோ டுறழ்ந்துவென்ற வாகை குறிப்பதறிக.

இன்னும் சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் எனும் கோவூர் கிழார் பாட்டினிறுதியில்,

'விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண் டலைப் புணரி நின் மான்குளம் பலைப்ப வலமுறை வருதலும் உண்டென் றலமந்து... துஞ்சாக் கண்ண வடபுலத் தசசே' (புறம். க.க) எனவருவது, எதிர்ப்பாரின்றி உலகறிய வுயர்ந்த தறுகண் வீறு கூறும் வாகையாதல் காண்க.