பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கடு இ1ேA.

எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடர் இங்குக் கூறப்பட்ட வாகைத்திணையிலக்கணத்தினையும் வாகைத்திணையை மேற் கொண்டோர்க்கு உயிர்க்குயிராய் உள்நின்று ஊக்கமளிக்கும் இறைவனது பேருதவியினையும் நன்கு புலப்படுத்துவதாகும்.

16. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும் பாலறி மரபில் பொருநர் கண்ணும் அறநிலை வகையோடு ஆங்கெழு வகையால்*

தொகைநிலை பெற்றது என்மனுர் புலவர்.

இளம் : இது, வாகைத்தினை பாகுபடுமாறு உணர்த் துதல் நுதலிற்று.

பார்ப்பனப் பக்கம் முதலாகப் பொருநர் பக்கம் ஈறாகச் சொல்லப்பட்ட அத்தன்மைத்தாகிய நிலைவகையோடே. ஏழ் வகையால் தொகைநிலைபெற்றது (வாகைத்திணை. எனவே தொகைநிலை பல வென்பது பெறுதும்.

(இ-ஸ்.) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்.

அறுவகைப்பட்ட பக்கம் எனக் கூட்டுக. அவையாவன :ஒதல் ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. இவ்வொழுக்கத்தால் மிகுதல் வாகையாம் என்பது. பார்ப்பனப் பக்கமும் என்ற தனான் அப்பொருளின் மிகுதி கூறலும் இதன்பாற் படும் இது மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும்.

ஒதலாவது கல்வி.

ஒதல் வருமாறு

'இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாங்காணேம் கல்வியோல்

மம்மர் அறுக்கும் மருந்து.' (நாலடி. கல்வி உ)

இது கல்வியின் விழுப்பம்கூறிற்று.

(பாடம்) 1 வகையில்.