பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


&#&T &r தொல்காப்பியம்-பொருளதிகாரம் -உரைவளம்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்-ஐவகைப்பட்ட அரசர் பக்கமும்.

அவையாவன : ஒதலும் வேட்டலும் ஈதலும் படைவழங்கு தலும் குடியோம்புதலுமாம். இவற்றுள் முந்துற்ற மூன்றும் மேற்சொல்லப்பட்டன. ஏனைய இரண்டும் இனிக் கூறப்படு கின்றன." r

படை வழங்குதல் வருமாறு "கடுங்கண்ண கொல்களிற்றால் காப்புடைய எழுமுருக்கிப் பொன்னியல் புனைதோட்டியான் முன்புதுரந்து சமம்தாங்கவும் பாருடைத்த குண்டகழி நீரழுவ நிவப்புக் குறித்து நிமிர்பரிய மாதாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண்.வடுக்கொள வழங்கவும் பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை புலவு நாற் றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளிஇ ஊன்துவை கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும் மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு ஆசனங் காகிய மார்பிற் பொருநர்க்கு இருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேஎய்திற் பாடுநர் கையே.' (புறம். கச)

குடியோம்புதல் வருமாறு "இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத்து அகலமும்

1. ஐவகை மரபின் அரசர் பக்கம் என்பதற்கு, அவையாவன ஒதலும் வேட்டலும் ஈதலும் படை வழங்குதலும் குடியோம்புதலுமாம்' என இங்கு rఉత్థ தந்த இளம் பூரணர், வேட்பித்தலாவது, வேள்வி செய்வித்தல், நளி *4.கிருங்குட்டத்து (26) என்னும் புறப்பாட்டினுள்............அரசன் வேட்பித்த 1ேறும் பார்ப்பார் வேட்டவாறும் கண்டுகொள்க’ என முன்னர்க் குறித்துள்ளார். :னவே ஆரசர்க்கு வேட்டற்றொழிலினும் வேட்பித்திற்றொழில்ே சிறப்புடைய தென்பது இளம்பூரணர் கருத்தெனக் கொள்ளவேண்டியுளது.

அரசர்க்குரியன ஐந்தொழில்கள் ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் 'றல், பல்லுயிரோம்பல் எனப் புறப்பொருள்.வெண்பாமாலைபுரை கூறும்.