பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு ஆ நீக்,

அறிவன் என்றது கணியனை மூவகைக் காலமும் நெறி யினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகா யத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் துரமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல். ஆதலான் மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார்.

நால் இரு வழக்கின் தாபத பக்கமும்-எட்டுவகைப்பட்ட வழக் கினையுடைய தாபதர் பக்கமும்."

அவையாவன :-நீராடல், நிலத்திடைக்கிடத்தல், தோலு டுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டி லுள்ள உணவு கோடல் தெய்வப்பூசையும் அதிதி பூசையும் செய்தல். இவற்றுள்ளும் சில வந்தவாறு காண்க.

பால் அறி மரபின் பொருநர் கண்ணும்-பாகுபாடு அறிந்த மரபினையுடைய பொருநர் பக்கமும்."

அஃதாவது, வாளானும் தோளானும் பொருதலும் வென்றி கூறலும் வாகையாம் என்றவாறு.

அனைநிலைவகையொடு-வாளானும் தோளானும் பொரு து வேறலன்றி அத்தன்மைத்தாகிய நிலை வகையான் வேறலொடு.

அஃதாவது, சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும்-பிறவும் அன்ன.

'விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்." (குறள். சு.ச.அ) இது சொல் வென்றி.

1. அறிவன் என்ற து கணிவனை' எனவரும் இளம்பூரணர் கூற்று, அவர்க் குக் காலத்தால் முற்பட்ட ஐயனாரிதனார் கருத்தொடு மாறுபடுகின்றது. மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி ன் ஆற்றிய அறிவன் வ ைகயினை 'புகழ் துவல முக்கால மும், நிகழ் விபவனியல் புரைத்தன்று?? (பு. வெ. மா. வாகை-கது.) என விளக்கிய ஐயனாரிதனார், அறிவனின் வேறாகிய கணிவனது இயல்பினை,

’துணிபுண ருந் தொல்கேள்விக்

கணிவனது புகழ் கிளந்தன்று' (பு. வெ. மா. வாகை-உo) எனக் கணிவன்முல்லையென்னுந்துறையில் விளக்கியுள்ளமை இங்குக் கூர்ந் துணரத் தகுவதாகும்.

2. தாபதப் பக்கம வன, தவஞ்செய்வார்க்குரிய செயல் முறைகள் . 3. பால்-பாகுபாடு; பல்வேறு போர்த் தொழிற்பகு தி பொருநர்-வீரர். குபாடு அறிந்த மரபினையுடைய பொருநர் என்றது, வில், வாள், வேல்முதலிய படைக்கருவிகளாலும் மெய்யின் மொய்ம்பினாலும் பகை வரொடு பொருது மேம்படுதலில் வல்ல வீரர் என்பதாம் .