பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு آن را تش

(இ-ள்.) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்-ஆறு கூற்றினுட்பட்ட பார்ப்பியற் கூறும்;

ஆறு பார்ப்பியலென்னாது வகையென்றதனான் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க: அவை ஓதல்,(ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்: கொடுத்தல், கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஒத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித் தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின்" இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந் தரும நூலும் இடை யாய ஒத்து; அதர்வமும் வேள்வி முதலிய ஒழுக்கங்கூறாது பெரும் பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ்சூழும் மந்திரங் கள் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று."

ஆறங்கமாவன. உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் திருத்தமும் அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனியம் பாரத்து வாசம் ஆபத்தம்பம் ஆத்திரயம் முதலிய கற்பங்களும், நாரா யணியம் வாராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சி யாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்.”

தரும நூலாவன, உலகியல்பற்றி வரும் (மனுமுதலிய பதினெட்டும்; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின."

(பாடம்) 1 வியாகரணத்தாற் காசியப்படுதலின்?

2. நான் மறைகளுள் இருக்கு, எசுர், சாமம் மூன்றும் தலையாய ஒத்து என வும் அதர்வவேதம் வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு நலந்தரும் மந்திரங்களுடன் இடர் விளைக்கும் மந்திரங்களும் பயின்று வருதலால் இடையாய ஒத்து எனவும் பகுத்துரைப்பர் தச் சினார்க்கினியர்.

3. நிருத்தம் என்பது, உலகியற் சொல்லையொழித்து வேகத்திற் பயின்ற சொற்களை ஆராய்வது. வியாகரணம் என்பது, உலகியற் சொற்களையும் வைதிகச் சொற்களையும் ஒருங்கே ஆராயும் ஐந்திரம் முதலிய இலக்கண நூல்கள். கற்பங்கள் ஆவன, வேதத்துடன் கூறப்படும் வேள்வி முறைகளை வகுத்துரை க் கும் போதாயணீயம, ஆபத் தம்பம், ஆத்திரேயம் முதலியன. கணிதங்கள் ஆவன, நாராயணியம், வாராக முதலிய எண் ணுால்கள். பிரமம் என்பது, எழுத்கா ர ய்ச்சி பற்றியது. சந்தம் என்பது, செய்யுளிலக்கணம். இவை ஆறும் வே தப் பொருளையுணர் தற்கு அங்கமாதலின் ஆறங்கம் எனப்பட்டன.

4. இவை வேதத்திற்கு அங்கமன்மையின் வேறாயின. என இத்தொடர் இருத்தல் வேண்டும் ,