பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


do so; or தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

மக்களையாயினும் விலங்கையாயினும் பகைத்திறத்தையாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியால் தண்டித்தல் அவர்க் குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும்.

"வகை"யென்றதனானே களவுசெய்தோர் கையிற் பொருள் கோடலும், ஆறிலொன்றுகோடலுஞ், சுங்கங்கோடலும். அந்த ணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப்பொருள் நும்மி டத்து யான் கொள்வலெனக் கூறிக்கொண்டு அதுகோடலும், மறம்பொருளாகப் பகைவர்நாடு கோடலு ந், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன்றாயங்கோடலும், பொருளில்வழி வாணிகஞ் செய்துகோடலும், அறத்திற் றிரிந்தாரைத் தண்டத்திற் றருமாறு பொருள்கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னாது பக்க மென்றதனான் அரசர் ஏனைவருணத்தார்கட் கொண்ட பெண் பாற்கட் டோன்றிய வருணத்துப் பகுதியோருள் சில தொழிற் குரியர் என்று கொள்க.

உதாரணம் :

'சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி வவைதுணே யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விருப்பு:மெய் பரந்த பெரும்பெய ராவுதி' (பதிற்றுப்-உக)

என வரும்.

'கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின்வழி வாழியர் வீறுசால் புதல்வர்ப் பெற்றனை யிவனர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப அன்னவை மருண்டென னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நசைமூ தாளனை வண்மையு மாண்பும் வளனு மெச்சமுத்