பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ಓ. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

ஆழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும், மணலுலகாகிய நெய்தற்புறம் இரு பெருவேந்தரும் பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலால் அது தும்பை என ஒரு குறி பெறுதலும் நடுநிலைத்திணையாகிய பாலைப்புறம் வேந்தரே யாயினும் ஏனை யோராயினும் தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் அது வாகை என ஒரு குறி பெறுதலும், பெருந்திணைப்புறம் நிலை யாமை யாகிய நோந்திறப் பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும், கைக்கிளைப்புறம் செந்திறமாகிய ஒரு பொருளே குறித்து வருதலின் பாடாண் என ஒரு குறி பெறுதலும் உணர்த்தியவாறு கண்டு கொள்க."

மேலை ஒத்தினுள்,

புறத்தினை மருங்கின் பொருந்தின் அல்லது,

அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே" (அகத் டு அ) என அகத்திணைச் செய்யுள் இயற்பெயர் கூறப்பெறாதென்றமை யானும், புறத்திணை மருங்கிற் பொருந்தும் என்றமையானும் உலகியலோடு ஒத்துவரும் காமப்பொருளாகப் பாடாண் பாட்டின் கண் இன்பம் இயற்பெயர் சார்த்தி வரப்பெறும் என்று கொள்க.?

1. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக் கிளை என வரும் அகத்திணை ஏழிற் கும் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பா டாண் என வரும் புறத் திணைகள் ஏழும் புறமாம். அவற்றுள், குறிஞ்சித் திணைப்புறமாகிய ஒழுக்கம் பகைவர் நாட்டுப் பசுக்கூட்டங் களைக் களவிற் கவர்ந்து கொள்ளுதலும் அங்ங்னம் கவரப்பட்ட ஆநிரைக் குரியோர் அவற்றை மீட்டுக் கொள்ளுதலும் ஆகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே வெட்சி எனவும் கரந்தை என வும் இரண்டு குறிபெறும். முல்லைத் தினை ப் புறமாகிய ஒழுகலாறு பிறர்நாட்டின் நிலப்பகுதியினைப் பற்றிக்கோடல் வேண்டும் என்னும் பெருவிருப்பத்தால் தன் மேற் படையெடுத்து வரும் வேந்தன் மேல் மற்றொரு வேந்தனும் போர் செய்தழித்தல் கருதிப் படையுடன் மேற்செல் லுதலாகிய ஒருதொழிலே புரிதலால் வஞ்சி என ஒருபெயர் பெறும். மருதத்திணை புறமாகிய ஒழுகலாறு படையொடு சென்ற வேந்தன் பகைவேந்தர் து மதிலை வளைத்து அழித்தலும் உள்ளிருந்த வேந்தன் தன் மதிலை அழிவின்றிப் பாது காத்துக் கொள்ளுதலும் ஆகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞை என வும் நொச்சி எனவும் இரண்டு பெயர் பெறும். நெய்தற்றினைப் புறமாகிய ஒழுகலாறு இருபெருவேந்தரும் ஒரு களத்து எதிர்நின்று பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலின் தும்பை என ஒரு தொழிலே புரிதலின் தும்பை என ஒரு பெயர் பெறும். பாலைத்திணைப்புறமாகிய ஒழுகலாறு வேந்தராயினும் ஏனைக் குடிமக்களாயினும் த த் தமக்குரிய துறைகளில் மேம்பட்டு விளங்கும் வெற்றித்திறம் ஆகிய ஒன்றையே குறித்தலால் வாகை என ஒருபெயர் பெறும். பெருந்தினை ப் புறமாகிய ஒழுகலாறு நிலையாமையென்னுந் துன்பியலாகிய ஒரு பொரு ளைக் குறித்து நிற்றலால் காஞ்சி என ஒருபெயர்பெறும். கைக்கிளைப் புறமாகிய ஒழுகலாறு இன் பியலாகிய ஒரு பொருளையே குறித்து நிற் றலால் பாடாண் என ஒரு பெயர் பெறும்.

2. மேல் அகத்திணை யியலின் முடிவில் அகத்தினை ச் செய்யுளுள் ஒருவரது இயற்பெயர் கூறப்பெறுதல் இல்லையெனவும் புறத்தினை மருங்காயின் இயற்பெயர் பொருந்தி வரும் என வும் தொல்காப்பியர் குறிப்பிடுதலால் உ ஸ்கிய