பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


も点、() தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்-காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற் நினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத் தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கமும்:

தேயத்தைக் கிழவோ டேஎத்து (இறையனாரகப்-அ) என்றாற்போலக் கொள்க.

கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென் றுணர்க."

நாலிருவழக்கிற் றாபதப் பக்கமும்-அவ்வறிவர் கூறிய ஆகமத்தின் வழிநின்று "வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துந் தவம்புரியுங் கூறும்;

வழக்கென்றதனான் அந் நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரியனவுந் தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று கொள்க.

அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம்பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என எட்டும், இவற்றிற்கு உணவி னும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்திநாப்பனும், நீர்நிலையிலும் நிற்றலுங் கடலுங் காடும் மலையும் முதலிய வற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந் துறந்த காற்றொட்டும் வாய்வாளாமையும் பொருளென் றுணர்க."

இனி யோகஞ்செய்வார்க்குரியன. இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என்னும் எட்டும் ஆம். இவற்றை,

1 தமிழகத்தில் குடமலையில் வாழ்ந்தவர் அகத்தியனார். எனவே அவர் குடமணி என வழங்கப்பெற்றார். குடமுனிவர் என்னும் பெயரைப் பொருளறி யாத வடமொழியாளர் கலசயோணி என மொழி பெயர்த்தனர். அதனாற் குடத்திற் பிறந்தவர் அகத்தியர் என்றதொரு பொருந்தாக் கதையும் பிற்காலத் திற் புனைந்துரைக்கப்படுவதாயிற்று.

(பாடம் 2 வீடு முயல்வார்க்கு?

3. தாமரை, ஆம்பல், யாமை என்பன யோகஞ் செய்வோர் அமர்ந்திருத்த லாகிய இருத்தல் வகையாகும்.

வாய்வாளாமை-உரையாடாமையாகிய மெளன நிலை.

- பாலறிமரபிற் பொருநர் கண்ணும்’ என வரும் தொடரை அறிமர பிற் பொருநர்

கட்பாலும் என இவ்வாறு மாற்றாது சூத்திரத்தில் உள்ளவாறே கொண்டு, போர்க்கூறுபாட்டினை அறிந்து போரியற்ற வல்ல வீரர்கண்ணும்' எனப் பொரு ளுரைத்தலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும்.