பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கசு 岛、T

வாகும். ஐவகை மரபின் அரசர் என்றது, சேர, சோழ, பாண்டிய ராவார். முடிவேந்தர் குடிமூன்று. ஆளுதற்குரிய வேளிர் குடி ஒன்று. மற்றைய குறுநில மன்னர் குடிமரபொன்று, ஆக மன்னவர் ஐவகை மரபினராய்ப் பண்டைத் தமிழகத் தாண்டன ராதலின்,' 'அரசர் எனப்படுதலான், ஈண்டுக் குறிப்பது ஆளுமன்னவரை மட்டுமே. தமிழ் வழக்கில் ஆளாத அரசர் என்றொரு சாதியில்லை. அமர்தொழில் தறுகண் மறவர் அனைவருக்கும் பொது உரிமை. அத்தொழில் புரிபவர் பொருநராவதல்லால், அரசர் எனப் படார்.

இனி, இருமூன்று மரபின் ஏனோர் என்றதும், தமிழர் மரபு வகையே குறிப்பதாகும். பண்டைத் தமிழகத்தில் மக்கள் மரபாலும் தொழிலாலும் ஒத்த உரிமையுடன் வாழ்ந்தவர்கள்; அவரிடைப் பிறப்பா லுயர்வு தாழ்வுடைமையும், விரும்பும் வினை புரியும் உரிமை விலக்கும் வழக்காறில்லை. தமிழர் வாழ்க்கை முறை ஒழுக்க வழக்கம் விளக்கும் தொல்காப்பியரின் அகப்புறத் திணை யியல்களில் யாண்டும் வடநூல்சுட்டும் வருணவகைக் குறிப்பு ஒரு சிறிதுமில்லை. இவ்வுண்மை பெயரும் விளையு மென் றாயிருவகைய’ எனும் சூத்திர உரையில் விரித்து விளக்கப்பட்டது. அதனாலும் இங்குத் தொழிற்றுறையில் வாகை சூடுவோரின் மரபு வகை கூறுதலானும், வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் வழக்கன்றிப் பிறநூல் மரபுகள் பேனாமையே தொல்காப்பியரின் துணிபாதலானும், ஈண்டு நிலம்பற்றிய தமிழர் மரபு வகை சுட்டு வதே கருத்தாதல் தேற்றமாகும். தமிழரின் தாவில் கொள்கை வினையனைத்தும் வாகைக்குப் பொருளாக வெற்றி விரும்பு மக்களின் மரபு கைகளையே இங்கு எண்கள் சுட்டுவது ஒருதலை. ஆயர், குறவர், உழவர், பரவர் என முல்லை முதல் நானில மக்களும், நிலக்குறிப்பின்றி யாண்டுமுள்ள வினைவலர்', ஏவன் மரபினர் என்றிருவகையின் மக்களுமாக மரபால் அறுவகைப்பட்ட தமிழ்க்குடிகள் உண்மையைத் தொல்காப்பியரே அகத்திணை யியலில் தெளித்துளாராதலின்’ தமிழர் புறவொழுக் ம் கூறுமிவ்

1. குறுநில மன்னரும் வேளிர் மரபினைச் சார்ந்தவரே என்பது, வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து' எனவரும் பதிற்றுப்பத்துத் தொடராற் புலனாதலின், வேளிரின் வேறாகக் குறுநில மன்னரைக் கூட்டி அரசர் பக்கம் ஐந்து என்ற ல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.

2. ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களை நிலவகையாற் பகுத்துக் கூறிய தன்றிக் குலவகையாற் பகுத்திலர் என்பது நாவலர் பாரதியார் அவர்கட்கும்உடன் - டாதலாலும் அகத்திணையியலிற் சுட்டப்பட்ட அடியோர் வினைவலர், ஏவன் மரபின் ஏனோர் என்னும் பகுப்பு மக்களது அறிவாற்றல்களின் மிகுதி குறைவுகட் கேற்ப வழங்கும் புெ:ப்பகுப்பாவதன்றி நிலைபெற்ற குலப்பகுப்பன்மையாலும்