பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பாகசு

'அறுதொழிலுடைய பார்ப்பனர் பக்கமும்,

ஐவகைத் தொழிலுடை யாசர் பக்கமும்,

இருமூன்று தொழிலுடை ஏனோர் பக்கமும்' என ஏற்ற தொழில்சொற் கூற்றால் விளக்கும் ஆற்றலின்றி இயை பினை மறந்து வேற்றுபொருள் விளக்கும் மரபுச் சொற் பெய்தன ரென்று கூற யாரும் துணியார். இன்னும் இங்கு வருணவகை விளக்குவதே கருத்தாயின், உரிமையுடைய இருபிறப்பாளர் மூவரையுமுறையே கூறிப் பிறகு அவர்க்குரிய அடிமைகளாய் உரிமையற்ற நான்காம் வருணத்தாரையும் வரிசை முறையே வகுத்துக் கூறுவர். அதைவிட்டுப் பார்ப்பாரையும் ஆளும் வேந்த ரையும் மட்டும் சுட்டி, வைசியரையும் ஆளாச்சத்திரியரையும் அறவே விட்டு, அந்தணரும் அரசரும் அல்லார் எல்லாரையும் சூத்தி ரருடன் சேர்த்து ஒராங்கெண்ணி ஒருவகுப்பாக்கி ஒத்தவாகைத் தொழிலுடைய ஏனோர்' எனத் தொகுத்துச் சுட்டியதொன்றே வருண தரும வகையெதுவும் கருதுங் குறிப்பிங்கின்மையினை வலி யுறுத்தும். அன்றியும், தமிழகத்தில் நான்கு வருணம் என்று மின்மை யாவருமறிந்த உண்மை. தமிழரொடு கலவாத் தருக் குடைய பார்ப்பார் தமிழருள் சத்திரியர் வைசியரென யாரையும் தழுவினதில்லை. உணவும் மணமும் ஒத்தும் வேள்வியும் முப்புரிச் சடங்கும் இருபிறப் பெய்தலும் இன்னபிறவும் தம்மரபினர்க்கு ஒத்த வுரிமையைத் தமிழருள் யார்க்கும் பார்ப்பார் தாரார். இல்லாக் கற்பகம் பொல்லா யாளிகள் கதைக்கப்படுதல்போல், இடை இரு வருணமும் வடவர் புனைந்த நூற்கதையன்றித் தமிழக வரைப்பில் வழக்காறில்லை.

இன்னும், பார்ப்பாரல்லா மற்றைய மூன்று வருணத்

தார்க்கும் மனு முதலிய வடநூல்கள் விதிக்கும் தொழில்வகைகள் இச்சூத்திரப் பழைய உரைகாரர். அவரவர்க்குக் காட்டும் தொழில் வகைகளுடன் முற்றும் முரணுதலானும், அவருரை பொருந்தாமை தேறப்படும். தமிழரெல்லாரும் கடைவருணச் சூத்திரர் என்பதே பார்ப்பனர்.துணிவு மற்றைய மேலோர் மூவருக்கும் அடிமைகளாய்த் தொண்டு புரிவதொன்றே அவர்க்குரிய தொழில்; பிற தொழி லெதுவும் தமக்குத்தம் பயன்கருதி மேற்கொள்ளுமுரிமை குத்திர ருக்குச் சிறிதுமில்லை. ஒத்த உணவு மணம் ஓதல் வேட்டல் தொழில் முதலிய ஆரிய மக்க்ளுரிமை எதுவுமில்லா இழிந்த அடிமைச் சூத்திரரை இருபிறப்புடைய வைசியரோடெண்ணி, வைசியர் தொழில்களைச் சூத்திரருக்குரித்தாக்கினதுமன்றி, தருமி