பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கசு 2. C &

(இ.ஸ்) (தொழிலால்) அறுவகைப்பட்ட பார்ப்பார்க்குரிய பகுதியும், ஐவகைப்பட்ட அரசர்பகுதியும், அறுவகைத் தொழி வினரான ஏனை நில மக்கள் பகுதியும், குற்றமற்ற ஒழுகலாற் றினை இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியால் அமைத்த முழுதுணர்வுடைய அறிவன் பகுதி யும், எட்டுவகைப்பட நிகழும் தவஞ்செய்வார் பகுதியும், முன்னர்ப் பல கூறுபாடுகளாகப் பகுத்துணர்த்திய போர்த்துறை களையறிந்த பொருநராகிய போர்மறவர்க்குரிய கூறுபாடும், அத் தன்மையவாகிய நிலைமையுடைய பிற தொழில் வகையான் உளவாகும் வென்றிவகையுடன் சேர்த்து இவ்வாறு எழுவகை யாகப் பகுத்துரைக்கப்படும் தொகைநிலையினைப் பெற்றது வாகைத்திணை-எ-று.

அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமாவது ஒதல், ஒதுவித்தல்: வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில் களாகும். அறுதொழிலோர் (திசு) எனத் திருக்குறளிலும், 'ஓதல் வேட்டல் அவை பிறர்ச்செய்தல், ஈதல் ஏற்றலென்று ஆறு புரிந்தொழுகும் அறம்புரி அந்தணர் (உச) எனப் பதிற்றுப்பத் திலும் அந்தணர்க்குரிய அறுதொழில்கள் குறிக்கப்பெற்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தகுவதாகும். ஐவகை மரபின் அரசர் பக்கமாவது ஒதல், வேட்டல், ஈதல், படைவழங்குதல், குடி யோம்புதல் என்னும் ஐவகைப் பகுதியாம் என்பர் இளம்பூரணர். ஈண்டு இருமூன்று மரபின் ஏனோர்’ எனக் குறிக்கப்பட்டோர் இச்சூத்திரத்துக் கிளந்துரைக்கப்பட்ட பார்ப்பாரும், அரசரும், அறிவரும், தாபதரும், பொருநரும் அல்லாத குடிமக்களாகிய ஏனையோராவர். இருமூன்று மரபின் ஏனோராவர் வணிகரும் வேளாளரும் எனக்கொண்டு, வணிகர்க்குரியனவாக ஒதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் ஆறு தொழில்களையும் வேளாளர்க்குரியனவாக உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடுபுறந்தருதல், வழிபாடு, வேத மொழிந்த கல்வி, என்னும் ஆறு தொழில்களையும் குறிப்பிடுவர் இளம்பூரணர். வணிகர்க்கு உரியவாகக் கூறிய ஆறு தொழில் களும் புறப்பொருள் வெண்பாமாலை வணிக வாகை உதாரண வெண்பாவில் விரித்துரைக்கப் பெற்றன. அந்நூலில் வேளாண் வாகைக்குரிய உதாரண வெண்பாவில் இளம்பூரணர் கூறியவாறு ஆறுதொழில்கள் குறிக்கப் பெறவில்லை. மேல் வருணத்தார் மூவரும் மனம் விரும்ப அவர்கள் ஏவியனவற்றைச் செய்தலும்