பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கசு 2- Ο ή.

பாக்சளுக்குப் பிற்காலத்தில் இந்நாட்டிற் குடியேறிய வடவரது வருணாச்சிரம விதிகளை வலிந்து புகுத்திப் பொருள் கூறுதல் வரலாற்று நெறிமுறைக்கும் தொல்காப்பியனார் கருத்துக்கும் ஒரு சிறிதும் பொருந்தாது என்பதனைத் தொல்காப்பியங்கற்போர் உளங்கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

"மறுவில் செய்தி மூவகைக்காலமும், நெறியின்ஆற்றிய அறிவின் தேயமும் என்ற தொடர்க்கு, குற்றமற்ற செயலை யுடைய மழையும் பணியும் வெயிலும் ஆகிய மூவகைக் காலத்தி னையும் நெறியினாற்பொறுத்த அறிவன் பக்கமும்’ எனப் பொருள் வரைந்து, 'அறிவன் என்றது கணிவனை. மூவகைக் கால மும் நெறியின் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாது ஆகா யத்தைப் பார்த்து, ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் துாமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல். ஆதலான் நெறியின் ஆற்றிய அறிவன் என்றார் என விளக்கம் கூறி, புரிவின்றி யாக்கைபோல் (கணிவன் முல்லை) எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளை உதாரணங் காட்டினார் இளம்பூரணர், புறப்பொருள் வெண்பா மாலையில் வாகைப்படலத்தில் அறிவன் வாகை என்னுந் துறை யினை விளக்குமிடத்து, முக்கால நிகழ்ச்சியையும் அறியுமவனே அறிவன் வாகை என்பதனை,

"புகழ்து வல முக்காலமும், நிகழ்பறிபவன் இயல்புரைத்தன்று' எனவரும் கொளுவில் ஐயனாரிதனார் தெளிவாக விளக்கியிருத்த லால் அவ்வாசிரியர் கருத்துக்கு ஏற்ப,

'இம்மூவுலகின் இருள்கடியும் ஆய்கதிர்போல் அம்மூன்றும் முற்ற அறிதலால்-தம்மின் உறழா மயங்கி புறழி னும் என்றும் பிறழா பெரியோர் வாய்ச் சொல்?

என்ற வெண்பாவினையே அறிவன் வாகைக்கு உதாரணமாகக் காட்டியிருத்தல் வேண்டும். ஐயனாரிதனார் தாம் இயற்றிய புறப் பொருள் வெண்பாமாலையில் அறிவன்வாகையையடுத்துத் தாபதி வாகையைக் குறித்துள்ளமை,

"மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் தாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்’