பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கன உCடு

பெரும்பகை தாங்கும் வேலி னானும் அரும்பகை தாங்கும் ஆற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றோடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் ஒல்லார் இடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானும் மாவி னானுந் துகட்டபு சிறப்பின் சான்றோர் பக்கமும் கடிமனை நீத்த பாலின் கண்ணும் எட்டுவகை நுதலிய அவையகத் தானும் கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடையி னானும் பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புண்ர்ந்த பக்கத் தானும் அருளொடு புணர்ந்த அகற்சி யானும் காமம் நீத்த பாலி னானுமென்று இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே.

இளம் : இது, வாகைத்துறையாமாறு உணர்த்துதல் துதலிற் று.

(இ-ஸ்.) கூதிர்ப்பாசறை முதலாகச் சொல்லப்பட்ட பதி னெட்டுத்துறையும் வாணிகத்துறையாம். எனவே, மேற்சொல்லப் பட்ட ஏழ் வகையும் திணையென்று கொள்க."

கூதிர் வேனில் என்று இரு பாசறை காதலின் ஒன்றி கண்ணிய வகையும் - கூதிர்ப்பாசறையும் வேனிற்பாசறையும் என்று சொல்லப்பட்ட இருவகைப் பாசறைகளையும் போரின்மீது கொண்ட காதலாற் பொருந்திக் கருதிய போர்நில்ை வகையும்.

இவை இரண்டும் ஒரு வகை." (இச்சூத்திரத்தில் வரும் இன்னும் ஆனும் இடைச்சொற்கள்.)

1. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் முதலாக அனை நிலைவகை ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் வாகைத்திணை வகையாம் எனவும், இந்நூற்பாவில் விரித் துரைக்கப்படுவன வாகைத் திணைக்குரிய துறைகளாம் எனவும் பகுத்துணர்ந்து கொள்க என்பார், மேற்சொல்லப்பட்ட ஏழ்வகையும் தினையென்று கொள்க: என்றார்.

2. கூதிர்ப்பாசறை, வேனிற்பாசறை எனப்பகுத் துரைக்கப்பட்ட இரண்டும் பாசறைநிலை என ஒரு துறையாகவே எண்ணப்படும் என்பது கருத்து.