பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2_{}研 தொல்காப்பியம்-பொருளதிகாரம் - உரைவளம்

ஏரோர் களவழி அன்றி களவழி தேரோர் தோற்றிய வென்றியும். ஏரோர் களவழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும்.

அது களம்பாடுதலும் களவேள்வி பாடுதலுமாம் (களவழி. களத்தில் நிகழும் செயல்கள்.)

உதாரணம் 'இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழின் மருப்பின் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள்மின் ஆக வயங்கு கடிப் பமைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக அரசுஅசாப் பணிக்கும் அணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக விடியல் புக்கு நெடிய நீட்டி நின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல்போர்பு சணநரி யோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகள ந் தழிஇப் பாடுநர்க் கிருந்த பீடுடையாள இஃது ஏரோர் களவழி.

'ஒது உவமை உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து, ' (களவழி. கடசு) இது போரோர் களவழி.

1. ஏரோர் களவழி என்பது, ஏரின் வாழ்வாராகிய உழவரது தொழிலை யொத்துப் போர்மறவர் நிகழ்த்தும் போர்த் தொழிலை உருவகித்துப் போர்க்களத் தைப் புகழ்ந்து பாடும் துறையாகும்.

போரேர்களவழித்தேரோர் தோற்றுவித்த வென்றியாவது, போர்க்களத்தில் தேசூர்ந்து பொருதவீரர் தோற்றுவித்த வெற்றிச் செயல்களைப் புகழ்ந்துபாடும் களவேள்வி என்னும் துறை பாகும்.

இவ்விருவகைத் துறைகட்கும் இலக்கியமாக அமைந்தன பொய்கையார் பாடிய களவழிநாற்பதும் பரணி இலக்கி பங்களும் ஆகும். -