பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கன. 2.0:ள்

'நளிகடல் இருங்குட்டத்து வளியுடைத்த கலம்போலக் களிறுசென்று களன் அகற்றவும் களன.கற்றிய வியலாங்கண் ஒளிறிலைய எஃகேந்தி அரசுபட அமருழக்கி உரை செல முரசு வெளவி முடித்தலை அடுப்பாகப் புனற்குருதி உலைக்கொளிஇத் தொடித்தோள் துடுப்பில் துழந்த வல்சியின் அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய இது களவேள்வி.

தேரோர் வென்ற கோமான் தேர்முன் குரவையும் - தேரோ ரைப் பொருது வென்ற அரசன் தேர்முன் ஆடு குரவையும்."

ஒன்றிய மரபின் தேர்ப்பின் குரவையும் - பொருந்திய மரபின் தேர்ப்பின் ஆடு குரவையும்.

பெரும்பகை தாங்கும் வேலும்-பெரிய பகையினைத் தாங்கும் வேலினைப் புகழுமிடமும்.

அரும்பகை தாங்கும் ஆற்றலும் பொருதற்கரிய பகையைப் பொறுக்கும் ஆற்றலும்.

புல்லாவாழ்க்கை வல்லாண் பக்கமும்’-பொருந்தாத வாழ்க் கையினையுடைய வல்லாண் பக்கமும்.

ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணி சொல்லிய வகையின் ஒன் றொடு புணர்த்து தொல் உயிர் வழங்கிய அவிப்பலியும்’-பொருந் தாதார் நாணுமாறு தலைவரைக் குறித்து முன்பு சொன்ன

1. முன்றேர்க்குரவை முதல்வனை வாழ்த்திப்

பின் றேர்க்குரவை பேயாடுபறந்தலை: (சிலப். வஞ்சி) என வரும் தொடரில் இப்புறத்துறைகள் இரண் டினையும் இளங்கோவடிகள் எடுத்

தாண்டுள்ளமை காண லாம்.

2. புல்லா வாழ்க்கை என்றது, வாழ்க்கை நுகர்ச்சிக்கு இன்றியமையாத செல் வத்தொடு பொருந்தாத வறுமை வாழ்க்கையினை. இத்தகைய வறுமை நிலை யிலும் தறுகண் வீரன் தனது வல்லாண்மையினைத் துணைக்கொண்டு வறுமை யிற் செம்மையுடையனாக வாழும் வெற்றித்திறத்தினை விளக்குவதே புல்லா வாழ்க்கை வல்லாண்யக்கம்’ என்னும் இப்புறத்துறை என்பது இளம்பூரணர் கருத் தா கும. -

3. ஒல்லார்-பொருந்தாதார்; பகைவர். நாணுதலாவது இத்தகைய உள்ளத்திண்மை நமக்கு வாய்க்கப்பெறவில்லையேயென நாணித்தலைகுனித ல். பெரியவர்கண் ணிச் சொல்லிய வகையின் ஒன்று என்றது, தமக்குத் தலைவ ராயுள்ள பெருமக்கள் முன்பு இன்ன செயலைச் செய்யேன் ஆயின் இன்ன நிலை யினையடைவேன்’ என வகுத்துக்கூறிய வஞ் சினத்தின் ஒரு கூற்றினை, புணர்த்தல்-அ வ்வஞ்சினக் கூற்றொடு தன் வாழ்க்கையை இணைத்தல்.