பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கன் 総ー()。

குலத்தினுள் அளவால் மிக்க நீர்மையராதலின் வேறு ஒதப் பட்டது.

கடிமனை நீத்த பாலும்-கடிமனை நீத்த பக்கமும். அஃதாவது, பிறர்மனை நயவாமை. மேல், காம நீத்த பாலினானும் என்று ஒதுகின்றா ராகலின், இது மனையறத்தின் நின்றோரை நோக்கவரும்.

உதாரணம் 'பிறன்மனை நோக்காத பேசாண்மை சான்றோர்க்(கு) அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.” (குறள்- கசஅ) எட்டுவகை நுதலிய அவையகமும்’-எட்டுப் பாகுபாட்டைக் குறித்த அவையகமும்.

எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இவ்வகை மிகுதி உடைத்தென்றவாறு. அவை யாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்பன.

அவை எட்டினானும் அவை வருமாறு 'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காத லின் பத்துள் தங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்காறு இன்மை அவாஅ இன்மையென

1. கடி மனை' என்பதற்குத் தீதெனக் கடி தற்குரிய பிறர் மனை வேட்கை எனப் பொருள் கொண்டு கடிமனை நீத்தபால் என்பதற்குப் பிறர் மனை நயவாமை என உரை வரைந்தார் இளம் பூரணர். இந்நூற்பாவில் துறவறத்திற் குரிய காம நீத்தபால்’ என்பது பின்னர்க் கூறப்படுதலின், கடிமனை நீத்தபால்’ ன்ன்னும் இத்துறை, மனை யறத்தில் நின்றாரை நோக்கியமைந்தது என்றார் இளம்பூரணர். கட்டில் நீத்த பாலினாலும்’ என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடமாகும்.

2. அறங்கூறவையத்தார்க்குரிய எண் வகைப் பண்புகளையும் தொகுத் துரைப்பது.

'குடிப் பிறப்புக் கல்வி குனம் வாய்மை தூய்மை

நடுச்சொல்லு நல்லணி :ாக்கம்-கெடுக்கும் அழுக்கா ற வாவின்மை யவ்விரண்டோ டெட்டும் இழுக்கா அவையின் கண் எட்டு.?? என வரும் வெண்பாவாகும்.

உரைப்பா ருரைப்பனவெல்லாம் இரப்பார்க்கொன் lவார்மேல் நிற்கும் புகழ்' (உங்க) என வரும் திருக்குறள் புகழுக்குரிய காரணங்களுள் ஈதலே தலையாயதென்பதனை வற்புறுத்தல் காண்க, -