பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

චූ. ද්() தொல்காப்பியம்-பொருளதிகாரம்- உரை வளம்

இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்று.ழி நின்று.ழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பஇம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே.'

(ஆசிரியமாலை) கட்டமை ஒழுக்கத்து கண்ணுமையும்-கட்டுதல் அமைந்த ஒழுக்கத்தினைக் குறித்த நிலையினும்.

அஃதாவது, இல்லறத்திற்கு உரித்தாக நான்கு வருணத்தார்க் கும் சொல்லப்பட்ட அறத்தின்கண் நிற்றல். அவையாவன - அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பன. மிகுதி யாகலின், வாகை யாயின.

அடக்கமுடைமையாவது, பொறிகள் ஐம்புலன்கள்மேல் செல் லாமை அடக்குதல்.

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.' (குறள்-கa.சு) ஒழுக்கமுடைமையாவது, தங்குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்கமுடையராதல்.

  • ஒழுக்கம் விழுப்பம் தாலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.' (குறள். கங்க) நடுவுநிலைமையாவது, பகைவர்மாட்டும் நட்டார் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை.

'சமன் செய்து சீர்தூக்குங்கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.' (குறள், ககஅ) வெஃகாமையாவது, பிறர்பொருளை விரும்பாமை. 'படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன் மை நானு பவர்.' (குறள் கஎஉ) புறங்கூறாமையாவது, ஒருவரை அவர் புறத்துரையாமை.

'அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங் கூறான் என்றல் இனி து.' (குறள். ஆ அக)