பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கன 笠–$恐

தீவினையச்சமாவது, தீவினையைப் பிறர்க்குச் செய்தலை அஞ்சுதல்.

'தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு.’’ (குறள் 2.0க)

அழுக்காறாமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை.

'ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்கா றிலாத இயல்பு ' (குறள். கசுக) பொறையுடைமையாவது, பிறர் தமக்கு மிகுதியாகச் செய்த வழி வெகுளாமை.

'மிகுதியான் மிக்கவை செய்தாசைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்.’ (குறள். கதி அ)

பிறவும் இந்நிகரனவெல்லாம் கொள்க.

இடையில் வண்புகழ்க்கொடையும்-இடைதலில்லாத வளவிய புகழினைத் தரும் கொடையும்.

அஃதாவது, கொடுத்தற்கு அரியன கொடுத்தல். இதுவும் பாகுபாடு மிகுதிப்படுதலின் வாகையாயிற்று.

கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடிழந் ததனினும் நளிைஇன் னாதென வாள்தந் தனனே தலையெனக்கு ஈய

பிழைத்தோர்த் தாங்கும் காவலும்’-தம்மாட்டுப் பிழைத் தோரைப் பொறுக்கும் ஏமமும்.

பொருளொடுபுணர்ந்த பக்கமும்’-மெய்ப்பொருள் உணர்ந்த பக்கமும்.

1. பிழைத்தோர்-பிழைசெய்தோர். தாங்குதல் அவர் செய்த பிழை யினைப் பொறுத்துக்கொண்டு அவர்களைப் பாதுகாத்தல். இச்செயல் பண்பினால் மிக்க சான்றோர்க்குரிய வெற்றித் திறங்களுள் தல்ையாயது என்பார் பிழைத் தோர்த் தாங்குங் காவல்’ என்றார்.

2. பொருளொடு புணர்ந்த பக்கம்’ என்ற தொடரிலுள்ள *பொருள் என்ப தற்கு மெய்ப்பொருள் ஒன்றும், அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றினுள் அறனும் இன்பமும் அன்றி ஒழிந்து நாடு அரண், பொருள், அமைச் சு, நட்பு, படை என்னும் அரசுறுப்புக்கள் ஆகிய பொருள் என்றும், தம் பொருளென்ப தம் மக்கள்? என்ற வாறு மக்கட்பேறாகிய பொருள் என்றும் கொள்வர் இளம்பூரண ர்.