பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கன் 2一占历一

பக்கம் என்றதனால் ஒற்று, தூது, வினைசெயல்வகை, குடிமை, மானம் என வருவனவெல்லாம் கொள்க. அவற்றுட் சில வருமாறு:

'கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.” (குறள்-டு அடு) 'கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந் தூது.' (குறள்-க அசு)

பிறவும் அன்ன. இன்னும் பொருளோடு புணர்ந்த பக்கம்’ என்றதனாற் புதல்வர்ப் பேறுங் கொள்க.

உதாரணம் படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்னும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே." (புறம். க அஅ) அருளொடு புணர்ந்த அகற்சியும்-அருளொடு பொருந்தின துறவும்.

அஃதாவது, அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு என்பனவற்றைப் பொருந்துதலாம். அவற்றுள், அருளுடைமை யொழிந்த எல்லாம் விடுதலான் அகற்சி என்றார்."

அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடர்ப்படுமிடத் துத் தன்னுயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை.

“அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்னும் உள.' (குறள்-உசக) கொல்லாமையாவது, யாதொன்றையும் கொல்லாமை. 'அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.' (குறள்-க உக)

1. துறவுக்கு இன்றியமையாதனவாக இங்குக் குறிக்கப்பட்ட அருளுடைமை, கொல்லாமை, பெய்யாமை முதலியவற்றுள் அருளுடைமையொன்றே தம்மை விட்டு நீங்காதவாறு புணர்தற்குரிய நற்பண்பு என வும், கொல்லுதல், பொய்த்தல் முதலாகவுள்ள தீயபண்புகள் விட்டு அகற்றற்பாலன என வும் விளக்கு வார் 'அருளொடு புணர்ந்த அகற்சி என்றார் என்பது கருத்து.