பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

◌ ຼ . 5. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஏரோர் களவழி(த் தேரோர் தோற்றிய வென்றி, யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்-வேளாண்மாக்கள் விளையுட்காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்று வித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்;

என்றது நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாள்பட ஒச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப் பேருலைக் கண் ஏற்றி ஈனாவேண்மான் இடத்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலி யாசக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்த

综(了L抄,

உதாரணம் :

இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ செறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக வரசராப் பணிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநாணுகைத்த

1 : ஏரோர்களவழியன் றிக் களவழித்தேரோர் தோற்றிய வென்றி! என்ற தொடரை, ஏரோர் கள வழித் தேரோர் தோற்றிய வென்றியன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றி எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, வேளாண் மாக்கள் விளையுட் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் கள வழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித் த வென்றி என நச்சி ாைக்கினியர் கூறும் இவ்வுரை, பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை உளங்கொண்டு எழுதப் பெற்றதாகும். நச்சினார்க்கினியர் கருது மாறு இத்தொடர், தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியைக் குறித்த தாயின் அது பாடாண்டினை யாகுமேயன் றி வாகைத்திணைய காது. ஆகவே தேரோர்தேற்றிய வென்றி என்பதற்குத் தேரேறி வந்த போர் வீரர்கள் ஏர்க் களத்துக் களமர் செய்யுமாறு போலப் போர்க்களத்துத் தோற்றுவித்த வெற்றிச் செய்கைகள்’ எனப் பொருளுரைத்தலே வாகைத்திணையமைப்புக்கு ஏற்புடைய தாகும்.

(புரடம்) 2 செய்யுளை: 3 ன் டி.ல்’