பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ

புறத்திணை இயல்-நூற்பா க

க. அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தேனர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப் பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்கு வசத் தோன்றும் ஈரேழ் துறைத்தே." இத்தலைச் சூத்திரம் என் துதலிற்றோவெனில் வெட்சித் திணைக்கு இடமும் துறையும் வரையறுத்து உணர்த்துதல் துதலிற் று. இதனானே திணையும் துறையும் என்று வரும் புறப் பொருள் என்று கொள்க.

(இதன் பொருள்) அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந் தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்-அகத்திணை யிடத்து மயக்கம் கெட உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் வகைப்படக் கூறின்;

அகத்திணை மருங்கின் மயக்கம் கெட உணர்தலாவது, மேல் ஒதிய இலக்கணத்தால் மயக்கம் கெட உணர்தல்.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே-வெட்சி என்னும் தினை குறிஞ்சி என்னும் திணைக்குப் புறனாம்.

வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரை கோ.ல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலா னும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற்கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம்."

உட்குவரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே-வெட்சித்துறை" உட்கு வரத் தோன்றும் பதினான்கு துறையை உடைத்து.

துறை பதினான்கும் வருகின்ற சூத்திரத்துள் காட்டுதும்.

வகுத்த இப்பகுப்புமுறை, முன்னோர் நூலிற்கும் சங்கத்தொகை நூலாகிய கலித் தொகை முதலிய சான்றோர் செய்யுட் கும் தொன்று தொட்டுவரும் உயர்ந்தோர் வழக்கிற்கும் ஏலாததாய் முரண்படுதலாற் பொருந்தாது என்பர் இளம்பூரணர்.

1. அரில்-பிணக்கம்: ஈண்டு இச்சொல் மயக்கம் என்ற பொருளில் ஆளப் பெற்றது. தய-கெட, உட்கு-அச்சம். ஈரேழ்-பதினான்கு துறைத்து-துறைகளை யுடையது. துறை என்னும் பெயர டியாகப் பிறந்தது, துறைத்து’ என்னும் குறிப்பு வினை முற்றாகும்.

2. பகைவர் நாட்டுப் பசுநிரைகளைக் கவர்ந்து கொள்ளுதலாகிய செயல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலப்பகுதியில் நிகழ்தலானும் பிறர்நாட்டு ஆனிரை களைக் கள விற்கோடல் குறிஞ்சிக்குரிய களவொழுக்கத்தோடு ஒத்தலானும், நிரை கவர்வோர் அடையாளமாகச் சூடிக்கொள்ளும் பூ குறிஞ்சி நிலத்திற்குரிய வெட்சிப்பூவாதலானும் குறிஞ்சிக்கு வெட்சிபுரனாயிற்று என்பர் இளம் பூரணர் .

3. வெட்சித்திணை என்றிருத்தல் வேண்டும்,