பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கன క్తి. ఒళ్

உதாரணம் :

'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் துசய்மையிற் காத லின் பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுத் "தோலா நாவின் மேலோர் பேரவை *யுடன்மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்று.ழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே'

(ஆசிரியமாலை-புறத்திரட்டு-அவையறிதல்) என இதனுள் எட்டும் வந்தன.

கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்-வேத முதலிய வற்றாற் கட்டுதலமைந்த ஒழுக்கத்தோடு பொருந்திய காட்சி யானும்;

கண்ணதுதன்மை கண்மையெனப்படுதலின் அதனைத் கண்ணு மையென உகரங் கொடுத்தார். எண்மை வன்மை வல்லோர் என்பது எளுமை வலுமை வல்லுவோர் என்றாற்போல.

இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினையும் வென்று தடுத்தலாம். அவை இல்லறத் திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்க முடைமை ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்கா றாமை, பொறையுடைமை முதலியனவாம்.

உதாரணம் :

'ஒருமையு ளாமையோ லை ந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து' (குறள்-அடக்கசு)

(பாடம்) 1 உடனய விருக்கை யொரு நாளாமெனின்'