பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கன 2. 2. ří -

உதாரணம் :

கே.டி னல்லிசை வயமான் றோன் றலைப் பாடி நின்ற னெ னாகக் கொன்னே பாடு பெறு பரிசிலன் வாடினான் பெயர்தலென் னாடிழந் ததனினு தனியின் னாதென வாடந் தனனே தலையெமக் யே (புறம்-கசுடு, என வரும். இது புறம்.

பிழைத்தோர்த் தாங்குங் காவலானும்-தம்மைப் பிழைத் தோரைப் பொறுக்கும் பாதுகாப்பானும்;

காவலாவது இம்மையும் மறுமையும் அவர்க்கு ஏதம் வாராமற் காத்த லாதலால், இஃது ஏனையோரின் வெற்றி யாயிற்று."

பொருளோடு புணர்ந்த பக்கத்தானும்-அரசர்க்குரியவாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறு வனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதியானும்:

பக்கமென்றதனான் மெய்ப்பொருளுணர்த்தலுங் கொள்க. உதாரணம் :

'படைகுடி கூழமைச்சு நட்ப ணாறு முடையா னரசரு ளேறு. (குறள்-இறை. க) நாடு அரண்முதலாகக் கூறுவனவெல்லாந் திருவள்ளுவப் பயனிற் காண்க

படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணு முடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி யிட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்து நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே.’ (புறம்-க அஅ) கேள்வி கேட்டுப் படிவமொடியாது’’ (எச) என்னும் பதிற்றுப்பத்தும் அது.

1. பிழைத்தோர்-பிழை செய்தோர்; தவறு செய்தோர். தாங்குதல்-அறி யாமையாற் செய்ததெனப் பொறுத்துக் கொள்ளுதல். பிழையினைப் பொறுத்துக் கொள்வதோடன்றிப் பிழைசெய்தார்க்கு எக்காலத்தும் தீங்கு நேராது காக்கும் கருணைத் திறமும் உடைய இவர் தம் செயல், உலகில் ஏனையோர் செயலினும் மேம்பட்டு உயர்தலின் வாகையாயிற்று என்பது கருத்து.

இளம்பூாணர் உரை நோக்குக.

(பாடம்) 2 நடந்துஞ் சிறு கை நீட்டியும்’

3 மெய்பெற: