பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


È–2–&#7 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

'ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு: (குறள்-மெய்யு-ச) என வரும்,

அருளொடு புணர்ந்த அகற்சியானும்-அருளுடைமையோடு பொருந்திய துறவறத்தானும்;

அருளொடு புணர்தலாவது ஒருயிர்க்கு இடர்வந்துழித் தன்னுயிரையும் கொடுத்துக் காத்தலும் அதன் வருத்தந் தனதாக எண்ணி வருந்துதலும் பொய்யாமை கள்ளாமை முதலியனவு மாம். இக் கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றியாயிற்று.

காமம் நீத்த பாலினானும்-அங்ங்னம் பிறந்தபின்னர் எப்பொருள்களினும் பற்றற்ற பகுதியானும்;

உதாரணம் :

'காமம் வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங் கெடக்கெடு நோய்' (குறள்-மெய்யு-கC) என வரும்.

பாலென்றதனால் உலகியலு ணின்றே காமத்தினைக் கை விட்ட பகுதியுங் கொள்க.

என்று இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே-முன்னர் ஒன்பானும் பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட ஒன்ப தாகிய பதினெட்டுத் துறையினையுடைத்து வாகை என்றவாறு.

இதனுள் ஏது விரியாதனவற்றிற்கும் ஏது விரித்தவாற்றான் இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க. பாரதியார்

கருத்து :- இது, வாகைத்திணையின் துறை பதினெட்டு ஆமாறு விளக்குகிறது. இவை துறைகளென்றதனால் முன் சூத்திரம் கூறிய ஏழும் துறையாகாமல் வாகைத்திணையின் வகை யாதல் தேறப்படும்.

பொருள் :- கூதிர் வேனில் என்று இருபாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்-கூதிர்ப்பாசறை, வேனிற் பாசறை, என்னும் காலத்திற்கேற்ப அமைத்த கட்டுர்களில் போர்விருப்பால்

(பாடம்) ! துறவுள்ளம் பிறந்த பின்னர் என்ற வாறு.

2. இருபாற்படுதலாவது மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதும் ஆக இரண்டு வகைப்படுதல்.