பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உ. சி: தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

(இடைக்குன்றுார் கிழாரின் புறம் 78-ம் நெடுஞ்செழியன், தன்னை மதியாமல் தன் இளமை இகழ்ந்து மேல்வந்த அரும்பகை தாங்கி வென்ற, ஆற்றலை விளக்குகிறது. மேல் ஐந்தாவதும் இதுவும் ஒரு குரிசிலின் தறுகண்மைத்திறலே குறிப்பினும் முன்னது வேல்விறலை விதந்து கூறப் பின்னது போர்த்திறனும் பெருவலியும் பேசுகிறது.)

7. புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்-சிறந்து பொருந் தாச் சிறிய வாழ்வினும் வண்மை குன்றா வேளாண்மையும்.

'இடனில் பருவத்தும் ஒப்புரவுக் கொல்கார் கடனறி காட்சி யவர்-ஆதலின்,

வறுமைக்கஞ்சாத் தறுகண ரூக்கம் வாகைக்குரித்தாயிற்று.

8. ஒல்லார் நாணப் பெரியவர்க்கண்ணிச் சொல்விய வகையின் ஒன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும்பகைவரும் நாணுமாறு தம் தலைவரைக் குறித்து முன்சொன்ன வஞ்சின வுரையொடு வாய்ப்ப அமைத்துப், பழந்தொடர்புடைய (படையா) உயிரைக் களப்பலியாக வழங்கும் மறவேள்வியும்.

9. ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும் - பகைவரை இடம் வாய்ப்புழி அன்பாற் றழுவிக் கொள்ளும் பெருந்தகவும்.

குறிப்பு :- இவ்வொன்பதும் மறத்துறையில் வாகைக் குரியன. இனிவரும் ஒன்பதும் அறத்துறையில் வாகைக்குரிய வாகும்.

10. பகட்டினாலும் ஆவினாலும் துகள் தபு சிறப்பின் சான் றோர் பக்கமும்-எருதானும் பகவானும் குற்றமற்ற சீர்மிகு சால் புடையார் பெருமையும்,

(பகட்டால் சிறப்புடைச் சான்றோராவர், கோழைபடா மேழிச் செல்வராய வேளாண் மாந்தர்; அவராற் சிறப்புறுவார் ஆயர், அதாவது கோவலர். ஆவினானும் எனக்கொள்ளாமல், மாவினாலும் எனப்பிரித்து, யானை குதிரையாகிய மாவினானும் என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மறத்துறைக்குப் பொருந்துமல்லாமல், அவரே கூறுகிறபடி முன் ஒன்பது மட்டும் மற வகையாக இது முதல் பின்வரும் ஒன்பதும் அறவகை வாகைத் துறைகளாதலின், அவ்வரிசையில் முதலாகுமிது அறத்துறைப் பொருளோ டமையாமை தெளிவு.)