பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கஅ 色历上五、

மையிற் பல்லாற்றானுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங் காற் கணந்தோறுங் கெடுவனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு ஆறென்றார். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமை யுணர்தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றானு மென்றதனாற் சில்லாற்றானும் வீடேது வாகலின்றி நிலையாமைக் குறிப்பு ஏதுவாதலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுந் தாபதப் பக்கமும் பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம்.

உதாரணம் :

மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக வியங்கிய விருசுடர் கண்னெனப் பெரிய வளியிடை வழங்கா வழக் கருநீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாசத்துப் பொன்னத் திகிரி முன்சமத் துருட்டிப் 'பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின் முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் விலை நலப் பெண்டிற் பலர்மீக் கூற வுளனே வாழியர் யானெனப் பன்மா னிைலமக எழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே '

(புறம்-சுடு) இதனுள் உண்டென உரைப்பரால் உணர்ந்தோ ரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார் நில்லா உலகம் புல்லிய தாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பலவேறு நிலை யாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம்.

(உக.)

பாரதியார்

ඵ් ඵ් -

கருத்து :- இது, அகப் பெருந்திணைக்குக் காஞ்சித்திணை புறனா மென்பது சுட்டுகிறது.

பொருள் :- இதன் பொருள் வெளிப்படை.

குறிப்பு :- ஏகார மிரண்டில், முன்னது பிரிநிலை; மற்றது ஈற்றசை. பொறியவிக்கும் உரனின்றி இன்பம் விழைந்து மேவன செய்வார் காமவகை பெருந்திணையாவதுபோல, முயற்சி மேற் கொள்ளும் உரனின்றி நிலையாமை சொல்லி நெஞ்சழிய மனமடி வதே காஞ்சியாவதாலும், இவ்விரண்டுக்கும் இடம் பொழு