பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.சி 2. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

(இ-ள்.) மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும்-பிறராற் றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சியானும்;

கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத் தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்துங் கடவுள்; அதனைப் பேரூர்க் கூற்றம்போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மையிற் காலம் உலகம்’ என (தொல். சொல்-கிளவி-டு அ.) முன்னே கூறினார்." உதாரணம் :

'பல்சான் நீரே பல்சான் ஹீரே கயன்முள் என்ன நகைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் ஹீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிதங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றி சாயினு மல்லது செய்த லோம்புமி னதுதா னெல்லாரு முவப்ப தன்றியு நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே.' (புறம்-கசுடு, இது விடேதுவாக வன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது.

'இருங்கடலுடுத்த' என்னும் (க.க ) புறப்பாட்டும் அது கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்-இளமைத் தன்மை கழிந்து அறிவுமிக்கோர் இளமைகழியாத அறிவின் மாக் கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்:

முதுமை மூப்பாதலான் அது காட்சிப்பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம்."

உதாரணம் :

"இனி நினைந் திரக்க மாகின்று நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா விளமை யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ

1. இங்குக் கூற்று என்றது, காலக்கடவுளை, உடம்பையும் உயிரையும் கூறு படுத்தலின் கூற்று என்பது காரணப்பெயர். மேல் கிளவியாக்கத்தில் காலம் உலகம்’ என்ற நூற்பாவிற்குறிக்கப்பட்ட காலம் என்ற தும் இக் கூற்றினையேயாம்.

2. முதுமை கட்புலனாதலின் காட்சிப்பொருளாயிற்று அது காரணமாக முன் கழிந்த இ மையின் நிலை ை பும் கூறியதாயிற்று.