பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக 曾_母°危一

தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற். றிருமிடை மிடைந்த சில சொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே.' (புறம்-உசங்.) இது வீடுபெறுதற்கு வழி கூறியது. பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தி னானும்-நன்றாகிய குணம் உறுநிலையாகப் பெறுகின்ற பகுதி யாராய்ந்து பெறுதற்குப் பட்ட விழுப்புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்;

இது யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது. இதனை வாகைத்திணைப் பின்னர் வைத்தார்: இக் காஞ்சியும் வாகையொடு மயங்கியுங் காஞ்சியாதல்பற்றி.'

உதாரணம் :

'பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன் புண் வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச் சென்று.ழிச் செல்க மாதோ வெண்குடை யாசுமலைந்து தாங்கிய களிறு படி பறந்தலை முரண் கெழு தெவ்வர் காண விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே. : இது போர் முடிந்த பின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புற வருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று.

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஒம்பிய போய்ப் பக்கமும்-கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மை யின் அருகு வந்து புண்பட்டோனைப் பேய்தானே காத்த பேய்க் காஞ்சியானும்;

பேய் காத்ததென்றலின் ஏமம் இரவில் யாமமாயிற்று; ஏமம் காப்புமாம்; ஒம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஒரியும் நரியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம்.

1. உலகப்பொருள்களின் நிலையின் மையுணர்த்தோர் அந்நிலையே அவற். றிற் பற்றொழிந்து நிலையுடைய பொருளையடைந்து வெற்றி பெறுதல் இயல்பா தலின் இக்காஞ்சித்திணை வன் கைத்தினையொடு கலந்தும் காஞ்சியா கு என்றார்.